செய்திகள்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்தநாள் விழா | நகரும் புகைப்படக் கண்காட்சி | மதுரை கலெக்டர் துவக்கி வைத்தார்

150th Birthday Celebration of Kappalottiya Tamil Chidambaranar | Moving Photo Exhibition | Madurai Collector initiated

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (09.05.2022) மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுசெய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் இந்திய தேசத்தின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடிய தலைவர்களில் ஒருவர். ”சுதேசி நாவாய் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தை தொடங்கி ஆங்கிலேயர்களின் வணிகத்திற்கு எதிராக இந்திய சுதேசி கப்பல் மூலம் பொதுமக்கள் மற்றும் வணிகர்களை பயணம் செய்ய வைத்தவர்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் புலமை பெற்றவர். ஆங்கிலேயர்களின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து வீர உரையாற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். அன்னாரது தியாகங்களை கௌரவிக்கும் விதமாக அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ்நாடு அரசு சார்பாக அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றை மாணவ, மாணவியர்கள் அறிந்து கொள்ளும் வகையில்,

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் குளிரூட்டப்பட்ட அரசு பேருந்தில் நகரும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 01.11.2021-அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இந்த நகரும் புகைப்படக்கண்காட்சியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

இந்த பேருந்தானது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மாணவ, மாணவியர்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இன்றைய தினம் (09.05.2022) மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவியர்கள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நகரும் புகைப்படக் கண்காட்சியானது 09.05.2022 முதல் 12.05.2022 வரையிலான நாட்களில் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரி, ஸ்ரீமீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, தியாகராஜர் கல்லூரி, யாதவா கல்லூரி, யாதவா மகளிர் கல்லூரி, வக்பு வாரியக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவ, மாணவியர்கள் பார்வைக்காக காட்சிப்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.சக்திவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலி தளபதி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ஏ.அபிமன்யு அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: