செய்திகள்போக்குவரத்து

கப்பலூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிப்பதில் தகராறு | சிசிடிவி கண்காணிப்பு அறை சாதனங்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

Dispute over toll collection at Kepilur toll plaza The CCTV surveillance room equipment was smashed and there was commotion

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்புசுங்க கட்டணம் கட்ட வலியுறுத்தி, காரை நிறுத்தி வைத்துள்ளனர். காரில் வந்த வாலிபர் தன் காரை கேட்டபோது, தரமறுத்ததால் ஆத்திரத்தில் சிசிடிவி, கேமரா அறையை அடித்து நொறுக்கி தப்பி ஓடிவிட்டார்.

திருமங்கலம் தாலுகா மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் இவர் தனியார் சொகுசு கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். மேலும் மக்களை தேடி மருத்துவம் என்ற விளம்பரம் ஓட்டப்பட்ட கார். வாகன ஓட்டுனர் கூறியது அரசு மருத்துவமனைக்கு ஒப்பந்தத்திற்கு காரை இயக்குவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சுங்க கட்டணம் கட்ட சுங்க சாவடி ஊழியர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே திருமங்கலம் நகர் எல்லைக்குட்பட்ட இடத்தில் இருப்பதால் சுங்கசாவடி அகற்றக்கோரி இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை கையாண்டு வருகின்றனர்.

போராட்டத்தின் போது திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட வாகனங்கள் கட்டண வசூலிக்கப்பட மாட்டாது என சுங்க சாவடியில் வாய்மொழி உத்தரவாக கொடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல் திருமங்கலம் நகர் மற்றும் ஒரு சில வாகனங்களுக்கு கட்டணம் இல்லாமல் வாகனங்கள் செல்கின்றன.

இந்நிலையில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த அரவிந்தன் சுங்க கட்டணம் கட்டாமல் உள்ளூர் வாகனம் என்று கூறிய நிலையில் சுங்க சாவடி ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தி கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்தியதால் அரவிந்தன் ஆத்திரத்தில் காரை இரண்டு தினங்களுக்கு முன்பு கரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று அரவிந்தன் தனது காரை எடுக்க வந்த பொழுது சுங்க சாவடி ஊழியர்கள் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். அங்கு சென்று பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த அரவிந்தன் சுங்க சாவடி சிசிடிவி கேமரா கம்ப்யூட்டர் கண்ணாடி உள்ளிட்ட சாதனங்களை அடித்து நொறுக்கி தப்பியோடியுள்ளார்.

உடனடியாக இச்சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் சாதனம் கம்ப்யூட்டர் ஆகிய பொருட்களை சேதப்படுத்தி தப்பிய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து அவருடைய காரை பறிமுதல் செய்து.சுங்க சாவடி சிசிடி அறையை சேதப்படுத்தி தப்பியோடிய வாலிபர் அரவிந்தனை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமங்கலம் டோல் கேட்டில் இதுபோல் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. ஆனால், இதை தடுக்கும் வழிமுறைகளை வகுக்காமல் அரசு மெத்தனமாக இருக்கிறது என பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இனியாவது கண்டு கொள்ளுமா ?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: