
திருமங்கலம் அருகே கப்பலூரை சேர்ந்த சந்திரன் மகன் நாகராஜ் (45) மனைவி பெயர் சுபத்ரா அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நாகராஜ் நாகப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள படகுகளுக்கு பெட்ரோல் பங்குகளில் இருந்து டீசல் வாங்கி வந்து சப்ளை செய்யும் கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கப்பலூர் சுங்கச்சாவடி முன் உள்ள உணவகப் பகுதியிலிருந்து கப்பலூருக்கு செல்வதற்காக நான்குவழிச் சாலையை கடக்க முற்பட்டபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த திருமங்கலம் நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சுங்கச்சாவடி ஊழியரை ஸ்கேன் செய்யும் பொழுது லாரி மோதியது குறிப்பிடத்தக்கது.