
பல சர்ச்சைகளுக்கு பெயர் போன மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் டோல்கேட் அருகே அரசு பேருந்து வேன் ஒன்று மோதியது. நேற்று (03.08.2022) இரவு எட்டு மணி அளவில் ஆரப்பாளையத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி அரசு பேருந்து கொண்டு சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது கப்பலூர் சுங்கச்சாவடி அருகே செல்லும் பொழுது வலது புறம் அரசு பேருந்து முந்தி செல்வதற்காக வேன் ஒன்று அரசு பேருந்து பக்கவாட்டில் உரசி சென்று நின்றது. அதிர்ச்சி அடைந்த பயணிகள், வேன் அரசுப் பேருந்து மீது மோதுவதைக் கண்ட பயணிகள் கூச்சலிட்டனர்.
உடனடியாக பேருந்தை நிறுத்தி ஓட்டுனர், கீழே இறங்கி பார்க்கும் பொழுது வலது புறம் முழுவதும் சேதமாகி இருந்தது தெரியவந்தது. கப்பலூர் சுங்கச்சாவடியில் நகர பேருந்துகள் செல்வதற்கான தனி பாதைகள் கிடையாது என்பதும், அனைத்து வாகனங்கள் செல்லும் பாதையிலே நகரப் பேருந்தும் செல்ல வேண்டிய அவலம் உள்ளது.
மேலும் அவசரகால ஊர்தி செல்வதற்கு வசதிகள் இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விபத்தானது டோல்கேட்டில் வரிசைகள் நிக்காமல் முந்திச் சென்று இப்பொழுது இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
நகரப் பேருந்துகளுக்கு என தனிப் பாதை அமைக்க வேண்டும் எனவும், அப்படி இல்லை என்றால் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க முடியாது என பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். கப்பலூரங சுங்கச்சாவடியில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாக இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளிவைக்க உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தால், விபத்துக்கள் இல்லாமல் தவிர்க்கலாம்.