ஆன்மீகம்செய்திகள்

கண்ணுடையாபுரம் கிராமத்தில் காளியம்மன் மாரியம்மன் கருப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா

Maha Kumbabhishekam of Kaliyamman Mariamman Karuppasamy Temple at Kannudayapuram Village

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணுடையாள்புரம் கிராமத்தின் அருள்மிகு காளியம்மன் மாரியம்மன் கருப்பசாமி கோவில் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக, இரண்டு நாட்களாக யாக பூஜை நடைபெற்றது.

முதல் நாள் மங்கள விநாயகர் வழிபாடு, தேவதை அனுமதி பெற்று, மகா சங்கல்பம், புண்ணிய வாசனம், வாஸ்து சாந்தி பூஜை செய்து, சாமிஅலங்காரம் செய்து, பிரசாதம் வழங்கப்பட்டது. இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை உடன் தொடங்கி தீபலட்சுமி பூஜை திருமுறை பாராயணம் மகாபூர்ணாஹீதி நடைபெற்று காலை 10 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஞாகசாலை பூஜைகளை கல்யாண சுந்தர சிவம் செய்தார்.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை, கன்னுடை யால்புரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஒன்றிய திமுக செயலாளர் பசும்பொன்மாறன், காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில துணைத்
தலைவர் கண்ணுடையாள்புறம் மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ரேகாவீரபாண்டியன், சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ்.

மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர்துணைச் செயலாளர் ஸ்டாலின், துணைத் தலைவர் லதா கண்ணன், நிர்வாகிகள் சி. பி. ஆர். சரவணன், வாடிப்பட்டி பிரகாஷ், மண்ணாடி மங்கலம் வழக்கறிஞர் முருகன், மணிவேல் ஊராட்சி மன்றத் தலைவர் பவுன்முருகன்
மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர். தொடர்ந்து கோவில் மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: