வரலாறுவீடியோ

கட்டபொம்மன் தளபதி சடக்குட்டிசேர்வை | லெக்கம்பட்டி| தூத்துக்குடி

Sadakutti Servai | Freedom Fighters of Tamilnadu | Hello Madurai

#சடக்குட்டிசேர்வை #கட்டபொம்மன் #சேர்வை

பயண அனுபவம்

மறக்க முடியாத பயண அனுபவங்களில் இதுவும் ஒன்று. தம்பி ராஜேஸ் கண்ணா அவர்கள் இந்த பதிவிற்காக 6 மாதங்களுக்கு முன்பாகவே சொல்லி, அதற்கான நேரத்திற்காக காத்திருக்க, அதற்கான நாள் இப்பொழுதுதான் கிடைத்தது. கிட்டதட்ட 300 கி.மீ பயணம். வீட்டில் வந்து படுத்தா அடுத்த நாள் அடிச்சுபோட்ட மாதிரி உடம்பு.

தூத்துக்குடி மாவட்டம் அருகில் லெக்கம்பட்டி எனும் கிராமம். விளாத்திக்குளத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. அழகான இடம். மாட்டுத்தாவணியில் இருந்து பஸ் ஏறினோம். சுமார் 2:30 மணி நேரம் பயணம்.

போதும்டா சாமினு சொல்லும் அளவு. வயித்த புரட்டிபோட்டு வாந்தி… இனிமே பஸ் பயணம் கிடையாது என்ற அளவிற்கு பயமுடுத்திவிட்டது.

உச்சி வெயிலில், விளாத்திக்குளம் சென்றடைந்தோம். இறங்குனதும் ஒரு லெமன் ஜீஸ், அடுத்த கொஞ்ச நேரத்தில் அண்ணன் முருகேசன் மற்றும் அவரது நண்பர் அங்கு வந்தாங்க, உடனே சிக்கன் பிரியாணி. செம சாப்பாடு. அதன்பின் ஆட்டோவில் ஏறி லெக்கம்பட்டி வந்தோம்.

நாங்க காலையில் வருவோம் என்று அந்த கிராமத்தில் பலரும் காத்திருந்ததாக கூறினார் எங்களை ஆட்டோவில் அழைத்து வந்த பெரியவர். வழி எங்கும் குண்டு மிளகாய், கம்பு, சிவப்புசோளம் ஆகியவற்றை காண முடிந்தது. காலையில் வந்திருந்தால் இதை எல்லாம் பேட்டி எடுத்திருக்கலாம் என்ற கவலை இல்லாமல் இல்லை.

அதன்பிறகு ஊருக்குப் பொதுவான இராஜகாளியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் காத்திருந்தோம். எல்லாரும் வேலைக்கு போய்ட்டாங்க. கிராமத்தில் பார்க்க சிலர் கரடுமுரடாக இருந்தாலும், அவர்கள் எல்லோரிடமும் ஒரு அன்பு தெரிந்தது.

இருட்டுனா கேமராவுக்கு கண்ணு தெரியாது என்பதால், சடக்குட்டி சேர்வை கும்பிடும் ராமர் கோவிலுக்கு போய் வீடியோ எடுப்போம் வாங்க என்று கூற, அழைத்துச் சென்றார்கள்.

ஆத்து வழியா போனா குறுக்கால சீக்கிரமா போய்றலாம். ஆனா தண்ணி இருந்ததால் சுத்திதான் போகணும், போனோம் இரண்டு பைக். 5 பேர். மறக்க முடியாத வழித்தடம். 5 தடவ பைக் நின்னு நின்னு, கரடுமுரடான பாதை வேற. ஸ்…. அப்பா அது எல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும்.

ராமர் கோவிலுக்கு வந்துட்டோம். சும்மா செம காத்து, வைப்பாறு தனி அழகு. புளியமரம், தலைக்கு மேல கருடன் என அம்சமா இருந்துச்சு. மயில்கள் அங்க அதிகம். எனக்கு இரண்டு மயில் தோகை கிடைச்சது. எடுத்து பத்திரமா வச்சுக்கிட்டேன்.

அப்புறமா முருகேசன் அண்ணன் அழைக்க, அங்கிருந்து கிளம்பினோம். அவருடைய கடையில் சுடச்சுட இரத்த கலரில் ஆம வடை, வெங்காய வடை என் நாக்கை அழைத்தது. தேனீருடன் லபக்குனு, அப்டி ஒரு டேஸ்ட். அங்கிருந்து சடக்குட்டி மனைவி உடன் கட்டை ஏறிய இடத்திற்கு 5 பேர் சென்றோம்.

அங்க வச்சுத்தான் பேட்டி எடுத்தேன். அதன் பிறகு, சடக்குட்டி எரித்த இடம். பொட்டலாக இருந்தது. அங்க ஒரு வேப்ப மரம் இருந்ததாகவும், இப்ப அது இல்லை என்றும் கூறி அதை காண்பித்தார் முருகேசன் அண்ணன்.

அதன் பிறகு, சடக்குட்டி பரம்ரையினர் இருக்கும் வீட்டுக்குச் சென்றோம். அந்த வீட்டு அருகில் அவர் கட்டிய கோவில் ஒன்று இருந்தது. அந்த கால கட்டிட முறைப்படி வீடு இருந்தது. எங்களை பார்த்ததும் பாட்டிங்க வந்துட்டாங்க. கும்மி பாட்டு படிக்க. அதுல ஒரு பாட்டி குரல் அப்டி இருந்துச்சு. வந்தா வரச் சொல்லுங்க… சினிமா பாட்டு போல…

கடைசியா எங்க நாங்க இருந்தோமோ, இராஜகாளியம்மன் கோவிலுக்கு வந்துட்டோம். அந்த கோவிலை எடுத்துகிட்டு, அங்கிருந்தவர்களையும் வீடியோ காட்சியாக பதிவு செய்தவிட்டு, கிளம்ப தயார் ஆனோம். அண்ணன் முருகேசன் ஹோட்டலுக்கு இறுதியாக வந்து சேர்ந்தோம்.

அண்ணன் முருகேசன் அவர்கள்தான் பேட்டி கொடுத்தது. ரொம்ப அழகா பேசினாங்க. அவருக்குத் தெரிந்ததை பதிவு செய்தாங்க. அவர் பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு. கஷ்டப்பட்டு வந்ததுக்கு பலன்.

கடைசியா எங்கள் பயண செலவிற்கான தொகையை கொடுத்து அனுப்பிவைத்தார் அண்ணன் முருகேசன். அவரிடம் இருந்து தொகை வாங்க எனக்கு துளியும் விருப்பமில்லை. அந்த ஆஸ்டெ்டாஸ் கடையில வெந்து சம்பாரிச்ச காசுதான் அது. ஆனால் இவர் போன்றவர்களிடம் பணம் வாங்கும்போது மன நிறைவு நிச்சயமா எனக்கு இருக்கு.

கிளம்புவதற்கு முன்பாக முருேகசன் அண்ணன் அவர்கள் சால்னா எப்படி வைப்பது என்று எனக்கு கற்றுக் கொடுத்தார். கை குலுக்கிவிட்டு பேருந்து நிலையம் சென்றோம்.

அங்கு பேருந்துகாக காத்திருக்க, அங்கிருந்தவர்களிடம் விசாரித்தேன். ஆமா சேர்வை பட்டம் மட்டும் போதும் என்று சடக்குட்டி சொல்லிட்டாரு, காசு பணம் எதிர்பார்க்காத வீரர் னு சொன்னாங்க. முக்கியமா தொல்லியல் துறை கண்ணில் படாத இடமாக உள்ளது. கீழடி போல் இங்கும் நிறைய புதை பொருட்கள் இருக்கு.

காத்திருந்த பஸ் வந்தது. இரவு 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். வரும்போது ராஜேஸ் கண்ணா தம்பி பல வரலாற்று தகவல்களை காண்பித்து கடுப்பேத்திவிட்டார்.

அடுத்த பயண அனுபவத்திற்கு காத்திருங்கள். நன்றிகள்.
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

🔵 App Link: https://play.google.com/store/apps/de…

🔵Online Web Tv : https://hellomaduraitv.com/

🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv

🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/

🔵 Agri News website : https://tamilvivasayam.com/

🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/

🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: