டிரைவ் தமிழ் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இதுவரைக்கும் சப்கிரைப் பன்னாதவங்க சப்ஸ்கிரைபர் பன்னுமாறு கேட்டுக் கொண்டு, இந்த வீடியோவில் நாம் பார்க்கப்போவது கிரிக்கெட்டை போலவே வாகனங்களின் மீதும் அதீத ஆர்வம் மிக்கவரான, மஹிந்திரா சிங் தோனிய பற்றித்தான் இவர் சமீபத்தில் மிக மிக பழங்கால கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது அந்த கார்தான். அவரது ராஞ்சி பண்ணை வீட்டில் அமைந்துள்ள கராஜில் பழங்கால விண்டேஜ் கார்கள் தொடங்கி பிராண்ட் நியூ கார்கள், பைக்குகள் என ரகம் ரகமாக வாகனங்கள் வச்சிருக்காரு. பழைய பைக் மற்றும் கார் சேகரிப்பில் இவரை மிஞ்சிய ஆள் இந்தியாவிலே இல்லை என்கின்றனர் இவரது ரசிகர்கள்.
இந்தத நிலையில்தான், அதை மெய்பிக்கும் வகையில், பிக் பாய்ஸ் டாய்ஸ் எனும் நிறுவனம் நடத்திய ஆன்லைன் ஏலத்தில், ரோல்ஸ் ராய்ஸ், கடில்லாக் ப்யூக், செவ்ரோலட், ஆஸ்டின், மெர்சிடிஸ் பென்ஸ் என பல முன்னணி நிறுவனங்களின் 19 கார்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இதில் என்ன விசேசம்னா… அங்கிருந்த கார்களில், லேண்ட் ரோவர் 3 விண்டேஜ் மற்றும் கிளாசிக் காரை வாங்க அதிக போட்டி போட்டதாக பிக் பாய்ஸ் டாய்ஸ் நிறுவனம் தெரிவிச்சிருக்காங்க.
நாடு தழுவிய அளவில் நடை பெற்ற இந்த ஏலத்தில், காரை வாங்கியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் பங்கேற்ற தல தோனி, லேண்ட் ரோவர் 3 காரை வாங்கியிருக்கார். மஞ்சள் நிறத்தில் கண்ணை பறிக்கும் இந்த கார் கடந்த 1971-இல் உருவாக்கப்பட்டது என்றும், 1971 முதல் 1985 வரையிலான காலகட்டத்தில் வெளியான லேண்ட் ரோவர் கார்களில் இந்த 3 ஸ்டேஷன் வேகன் கார் மிகவும் பிரபலம் எனவும் சொல்லப்படுகிறது. இதுதான் தல தோனிக்கு பிடிக்க காரணமாக இருக்கலாம்.
இந்த கார் உற்பத்தி செய்யப்பட்ட போது இரண்டு விதமான எஞ்சினை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது பெட்ரோல் மற்றும் 4 சிலிண்டர் கொண்டு இயங்கக்கூடிய என்ஜினுடனும், 2 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்ஃபர் பிரிவில் கேஸைால் இயக்கப்படும் என்ஜின் கார் என்றும் கூறப்படுகிறது. இதில தல தோனி வாங்கியுள்ள காரில் என்ன எஞ்சின் உள்ளது என்பது தெரியவில்லை. இப்பொழுது தல தோனி இந்த பழையக் காரோடுதான் அதிக நேரம் செலவிடுவதாகவும், அந்த காரில் சவாரி செய்து சந்தோசம் அடைவதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தல தோனியிடம் ஹம்மர் எச்2, ஜிஎம்சி சியரா பிக்-அப் டிரக், போர்ஸ் பாக்ஸர், ஃபெராரி 500 ஜிடிஓ, ஆடி க்யூ7, மஹிந்திரா ஸ்கார்பியோ, ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ சீரிஸ், கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் மற்றும் நிசான் ஜோங்கா எனும் பல பழைய கார்களை வைத்துள்ளார் என்ற தகவலுடன் விடைபெறுவது டிரைவ் தமிழன். நன்றி வணக்கம்.