
மதுரை மாவட்டம் திருமங்கலம், என் ஜி ஓ நகரை சேர்ந்தவர் ரவி – வளர்மதி தம்பதியினர், ரவி ராணுவத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். மனைவி வளர்மதி (47) பிளஸ் 2 வரை படித்திருந்த வளர்மதி 2 முறை TNPSC தேர்வு எழுதியுள்ளார். வறுமை மற்றும் திருமணம்., வயது காரணமாக தொடர்ந்து தேர்வு எழுத முடியாமல் போனது. திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகளுக்கு தாயான பிறகு BA.தமிழ் பட்டப்படிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு முடித்துள்ளார்.
இவரது மகள் சத்யபிரியா நீட் தேர்வுக்கு படித்து 2 முறை தேர்வும் எழுதியுள்ளார். இந்த நிலையில் வளர்மதி TNPSC தேர்வினை மீண்டும் எழுத முடிவு செய்து அதே நேரத்தில் தனது மகளையும் உற்சாகப்படுத்தும் விதமாக தம்முடன் சேர்ந்து தேர்வு எழுத வேண்டுமென தாய் கேட்டுக் கொண்டதை அடுத்து, சத்யபிரியாவும் TNPSC தேர்வுக்கு விண்ணப்பித்தார். தற்போது இருவருக்கும் ஒரே தேர்வு மையமாக கள்ளிக்குடி, அரசு மேல்நிலைப் பள்ளியில் TNPSC தேர்வுமையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வளர்மதி கூறியதாவது,
திருமணமாகி 3 குழந்தைகள் பிறந்த பின்புதான் BA தமிழ் பட்டப்படிப்பு முடித்தேன்., பொது அறிவு சம்பந்தமாக அதிகளவில் புத்தகங்களை தேடி படிப்பேன் TNPSC தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் எனது மகள் சத்யபிரியாவையும் இந்த முறை என்னுடன் சேர்ந்து TNPSC தேர்வு எழுதும்படி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து இருவரும் TNPSC தேர்வுக்கு ஒன்றாக விண்ணப்பித்தோம், தற்போது எங்கள் இருவருக்கும் ஒரே தேர்வு மையம் கிடைத்துள்ளது. இதனால், குடும்பத்தினர் மகிழ்ச்சியாக உள்ளனர். இருவரும் சிறப்பாக படித்துள்ளோம்” தற்போது தேர்வு எழுதியுள்ளோம் என கூறினர்.
மகள் சத்யபிரியா கூறும் போது,
கடந்த இரண்டு ஆண்டுகளாக தாம் நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததாகவும்., ஒரு சில மாணவர்கள் நீட் தேர்வு எழுதி அதில் தோல்வி அடைந்தால் தற்கொலை போன்ற தவறான செயலில் ஈடுபட்டு வருகின்றன அதை தவிர்க்க வேண்டும். மனம் உடைந்து விடாமல் TNPSC போன்ற அரசு தேர்வுகள் எழுதி வெற்றி பெற அனைவரும் முயற்சி செய்ய வேண்டும் என்று பேசினார்.