செய்திகள்போக்குவரத்து

ஒரு வருடமாக படுமோசமாக இயங்கும் மதுரை அரசு பேருந்து | அச்சத்துடன் பயணிக்கும் பயணிகள்

Madurai government bus has been running badly for a year Travelers who travel with fear

மதுரை மாநகரில் இயக்கப்படும் பாதி தாழ்தல மற்றும் சொகுசு பேருந்துகளில் ஓட்டை உரசலாகவே உள்ளது இதில் ஆபத்தான பயணமே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறுகையில், நான் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பழங்காநத்தம் பகுதிக்கு வரும் அரசு பேருந்தில் TN 58 -N 1544 பயணம் செய்தேன் மிகவும் ஆபத்தான பயணமாக இருந்தது.

ஒரு வருடத்திற்கு முன்பு இதே பேருந்தில் பயணம் செய்து போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்திற்கு பேருந்து மோசமாக உள்ளது. இந்த பேருந்தில் பயணிகள் பயணம் செய்தால் பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று புகாராக கூறி இருந்தேன் ஒரு வருடம் ஆகியும் தற்போதும் அதே நிலையில் தான் அந்த பேருந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

படிக்கட்டுகள் சீட்டுகள் டிரைவருக்கு அருகாமையில் உள்ள இன்ஜின் பகுதி இது எல்லாம் மிக மோசமாக உள்ளது. பேருந்து பயண செய்யும்போது ஆடிக்கொண்டே செல்கிறது. அதோடு மட்டுமல்ல ஒரு பேருந்தை வாகன ஓட்டி ஓட்டும் பொழுது அவரது கண்ட்ரோலில் வண்டி இருக்க வேண்டும். ஆனால், இந்த பேருந்து மட்டும் பேருந்து கண்ட்ரோலில் வாகன ஓட்டி இருக்கிறார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் உத்தேசமாக வாகன ஒட்டி ஓட்டுகிறார் பேருந்தில் வாகன ஓட்டின் அருகிலும் பின்பக்க படிக்கட்டுக்கு அருகிலும் கல் இருக்கின்றது. எப்பொழுது வண்டி நிற்கின்றதோ அப்பொழுது கல் தேவைப்படும் என்று வைத்திருக்கிறார்கள் எவ்வளவு வேதனையான செய்தி, மாவட்ட நிர்வாகம் போக்குவரத்து கழக நிர்வாகம் உடனே இதில் தலையிட்டு இந்த பேருந்தை சாலையில் ஓட்டுவதற்கு அனுமதிக்க கூடாது என்பது என் போன்ற பயணிகள் நலனில் அக்கறை உள்ளவருடைய வேண்டுகோள்.

இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள அரசு போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்குமா பயணம் செய்யும் பயணிகளுக்கு உயிருக்கு உத்தரவாதம் கிடைக்குமா என கோரிக்கை எழுகிறது உரிய நடவடிக்கை எடுக்குமா அரசு போக்குவரத்து கழகம் பொறுத்திருந்து பார்ப்போம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: