
ஒரிசா மாநிலத்தில் புவனேஸ்வரர் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள சாம்பியன்ஷிப்
போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் மதுரை மாவட்டத்தில் இருந்து பாரா தடகள வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் குண்டு எரிதல் பரிவு (41) மனோஜ் என்பவர் தங்க பதக்கமும், குண்டு எரிதல் பரிவு (54) படைத்தலைவர் தங்க பத்தகமும், குண்டூ எரிதல் பிரிவு (41) கணேசன் வெள்ளி பதக்கமும், குண்டு எரிதல் பரிவு (35) பிசாந்த் வெள்ளி பதக்கமும்.
ஈட்டி எரிதல் பரிவு (41) செல்வராஜ் வெள்ளி பதக்கமும் பெற்று மதுரைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றிபெற்ற வீரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான பயிற்சியாளர் ரஞ்சித்குமாருடன் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (16-5-2022) ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட ஆட்சியரும் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.