
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆறுமுகச்சாமி உத்தரவின் பெயரில் மதுரை மாநகர் முழுவதும் விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக ஒருவழி பாதையில் (no entry) செல்லும் வாகனங்களுக்கு, குறிப்பாக ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதில் ஒரே நாளில் 200க்கு மேற்பட்ட ஆட்டோக்களுக்கும், 600 க்கும் மேற்பட்ட இதர வாகனங்களுக்கும் ஒரு வழிப்பாதையில் சென்ற விதிமீறலுக்காக மொத்தம் ரூ.80,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
விதிமுறையை மீறி ஓட்டிவந்த ஆட்டோ டிரைவரிடம், தெப்பக்குளம் போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி, முனிச்சாலை பகுதியில் அபராதம் விதித்து, அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
2
+1
+1
+1
+1
+1
+1