பெட்ஸ்வீடியோஜல்லிக்கட்டு

ஒத்த கண்ணை இழந்தாலும் களத்தில் கெத்து காட்டும் செட்டிக்குளம் மருது கோயில் மாடு

jallikattu | Hello Madurai | Settikulam Maruthu Kaalai

#jallikattu #manjuvirattu #Vadijallikattu

கடந்த பொருசுபட்டி வீடியோவின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டதே செட்டிக்குளம் மருது கோயில்மாடு. அந்த வீடியோ இணைப்பு https://www.youtube.com/watch?v=iI-LkgWZ88E இங்கு சென்று அதன் பயண அனுபவத்தை தெரிந்து கொள்ளலாம். வீடியோ பார்க்கலாம்.

பயண அனுபவம்

பொருசுபட்டி கிராமத்திலிருந்து திரு. நித்தீஸ் தம்பி நம்மை செட்டிகுளம் கிராமத்திற்கு அழைத்துச் சென்றார். கோயில் மந்தையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது மருது மறை மாடு. இதுதான் எங்கள் அழகுநாச்சியம்மன் கோயில் இந்த கோவிலுக்கு கன்றிலிருந்து நேர்ந்துவிட்ட மாடுதான் என்றார் தம்பி திரு. நித்தீஸ்.

நல்ல நீர் வளம் நிறைந்த ஊர். இந்த கிராமத்தில் நெல் சாகுபடி அதிகம். வாழையும் உண்டு. ஊருக்கு அருகில் நீர் கால்வாய் இருந்தது. மருதுவை குளிக்க வைத்தனர். உடன் அவரது நண்பர் நந்தீஸ் மற்றும் சிலர் இருந்தனர். நன்றாக ஒரு குளியல் போட்டதும், பிறகு சாமி கும்பிட்டு, கோயில் மந்தையில் வைத்து மாட்டிற்கு அலங்காரம் செய்யும் பணி. அதை காட்சியாக பதிவு செய்து கொண்டிருந்தேன்.

ஏற்கனவே பொருசுபட்டியில் வீடியோ எடுத்த காரணத்தால், ஒரு பேட்டரி காலியாகிவிட்டது. அதை சார்ஜ் செய்ய எதிர்புறமாக இருந்த ஒரு பாட்டிய வீட்டில் ரீசார்ஜ் செய்யப்பட்டது. பின்பு அலங்காரம், பேட்டி என எல்லாமே நிறைவாக முடிந்தது.

ஒற்றைக் கண்ணை இழந்தாலும் 5 வாடியில் அவிழ்த்துள்ளனர் மருதுவை. ஒரு கண் பார்வையிலேே 4 வாடியில் சிறப்பாக விளையாடி வெளியேறி உள்ளது. புதுக்கோட்டை வாடியில் மட்டும் பிடிமாடாக ஆனது. ஆனால் அதுவும் எங்களுக்கு பெருமைதான் என்றனர் அந்த ஊர் தம்பிகள்.

இதுவரை 25 வாடிகளை கண்டுள்ளது. கட்டையில் நன்றாக பாயும்மாடு. மறைமாடு என்பதால் பார்வைக்கு கூடுதல் அழகு. உருவம், உயரம் இந்த இரண்டையும் வைத்து எதையும் எளிமையாக எடைபோட முடியாது என்பதற்கு மருது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குட்டையான மாடு என்றபோதும், களத்தில் இவனை பிடிப்பது என்பது சாதாரண விசயம் அல்ல அதை நித்தீஸ் அருமையாக வீடியோவில் விளக்கியிருப்பார்.

அன்றைக்கு என்னவோ கூடுதல் அலுப்பாக இருந்ததால் அது என் முகத்தில் அப்படியே தெரிகிறது. வீடியோவும், எடுக்க வேண்டிய கூடுதல் வேலை பளு என்பதால் அந்த களைப்பு.

எல்லா வீடியோ பதிவும் முடிந்துவிட்ட நிலையில், களைப்பு காரணமாக அங்கிருந்து அப்பன்திருப்பதிக்குச் சென்று ஒரு தேனீர் கடையில் நொறுக்குத்தீணியுடன், அவர்களிடமிருந்து விடைபெற்றேன். பாதி தூரம் வந்த பிறகுதான் ஞாபகம் வந்தது, பேட்டரி சார்ஜ் போட்டதை அங்கேயே மறந்து வந்தது.

ஒரு யூட்டன் போட்டு, மறுபடியும் அங்கு சென்று பார்த்தால் இந்த பாட்டி வீடு பூட்டிக் கிடந்தது. திரு. நித்தீஸ் அலங்காநல்லூரில் அவரது நண்பர் வீட்டு திருமணத்திற்கு சென்றால், என்ன செய்வது என்று தெரியவில்லை.

அந்த பாட்டிக்கு ஒரு கால் இல்லை என்பதால், அவர்கள் வேறு எங்கும் சென்று இருக்க வாய்ப்பில்லை யாராவது வீட்டில் இருப்பார் தேடி பாருங்கள் என்று கூற, ஒவ்வொரு வீடாக தேடிச் செல்ல, ஒரு வழியாக பாட்டியை கண்டுபிடித்துவிட்டேன்.

பாட்டி சிரித்துக் கொண்டே, மெல்ல நடந்து வந்து, வீட்டைத் திறக்க, சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த பேட்டரியை எடுத்து மகிழ்ச்சியுடன் அங்கிருந்து கிளம்பினேன். வீட்டிற்கு வர மாலை 4 மணியை தாண்டிவிட்டது. சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு, அடுத்த பணிக்கு ஆயத்தமாகினேன்.

அடுத்த வீடியோ பதிவில் எனது பயண அனுபவத்தை பகிர்கின்றேன். நன்றி வணக்கம்.

___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
Hello Madurai Raj – 📞 6382333644 ( Camera Man )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

🔵 App Link: https://play.google.com/store/apps/details?id=com.lone.anew&hl=en_IN&gl=US

🔵Online Web Tv : https://hellomaduraitv.com/

🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv

🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/

🔵 Agri News website : https://tamilvivasayam.com/

🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/

🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: