
மதுரை மாவட்டம், 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு ஒத்தக்கடை எஸ்.எஸ்.பாரடைஸ் மஹாலில் ” ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி@2047” மின்சார பெருவிழாவை (30.07.2022) வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:-
மின்சாரத்தை எந்த அளவிற்கு சிக்கமான பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும். ஏனெனில், மக்கள் தொகையின் அளவு அதிகரித்து வருவதால் வருங்காலத்தில் மின்சாரம் மிக அதிகமான அளவில் தேவைப்படுவதாக இருக்கும். மக்கள் தொகையின் அளவு அதிகரித்து வருவதை ஈடுசெய்யும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் புதிய, புதிய தொழிற்சாலைகளையும், வேலை வாய்ப்பினையும் அதிகமான அளவில் உருவாக்கிக் கொண்டு வருகின்றார்.
தமிழகத்தில் 33 ஆயிரம் மெகாவாட் உற்பத்தித்திறனாக இருக்கும் மின் உற்பத்தியை 70 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர் ஆகியோர் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து வருகின்றார்கள்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்போறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு 1 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி அவர்களின் வாழ்வினை ஒளிபெறச் செய்துள்ளார்கள். மின்சாரத்தின் அளவு குறைவாக இருக்கும் சூழ்நிலையிலும் விவசாயத்திற்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் மின்சாரத்தின் தேவை என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது.
விவசாயப் பெருங்குடி மக்கள் மானாவரி நிலங்களில் அறுவடை செய்யும் விளைபொருட்களின் உற்பத்தியைக் காட்டிலும், தோட்டக்கலையின் மூலமாக விவசாயம் செய்யும் பொழுது விளைபொருள்களின் உற்பத்தித் திறன் அதிகமாக கிடைக்கின்றன. கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொரு கிராமத்திலும் ஆங்காங்கே கல்தூண் இருக்கும். அந்த தூணில் கண்ணாடி ஜாடிக்குள் விளக்கினை ஏற்றி வைத்திருப்பர். மேலும், அரிக்கன் விளக்கு பயன்பாடு என்பதும் அதிகமான அளவில் காணப்பட்டது. கிராமப்புறங்களில் 99 சதவிகிதம் மக்கள் குடிதண்ணீர் கிணறுகளில் இருந்து தண்ணீரினை எடுத்து பயன்படுத்தினர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் வானம் பார்த்த பூமியாக இருக்கும் நிலங்களில் ஆடி மாதம் மழை பெய்தவுடன் பயறு வகைகள், கம்பு, சோளம் உள்ளிட்ட இடுபொருட்களை பொருட்களை விதைத்து பருவத்தே பயிர்செய் என்ற அடிப்படையில் விவசாயிகள் விவசாயத் தொழில் செய்து வந்தனர். ஆனால், தற்பொழுது இயற்கையின் மாறுபாட்டினால் மழை பொழியும் காலமும் மாறுபட்டு காணப்படுகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளிநாட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளைப் போன்று தமிழ்நாட்டிலும் அதிகமான அளவில் தொழிற்சாலைகளைகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் புதிய, புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வருகின்றார். தொழிற்சாலைகளை உருவாக்குவதால் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என்ற உயர்ந்த நோக்கில் செயல்பட்டு வருகின்றார். சுயதொழில் செய்பவர்களும் மின்சாரம் இருந்தால் மட்டுமே அத்தொழிலை தொடர்ந்து செய்ய முடியும் என்ற நிலையில் உள்ளனர்.
எனவே, கிராமப்புறங்களில் மின்சாரத்தை சிக்கமான பயன்படுத்துவதற்கு அலுவலர்கள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் மின்சாரம் இடர்பாடின்றி கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தேவைப்படும் அனைத்துப் பகுதிகளிலும் துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கும், போதுமான மின் இணைப்பு வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சூரியகலா கலாநிதி. மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி.மணிமேகலை, மாவட்ட நோடல் அதிகாரி (பவர்கிரிட்) கே.மணி, மேற்பார்வை பொறியாளர் (ம.பெ.மி.வ) டி.ஆர்.சந்திரா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.