
டர்னிங் பாயிண்டு நிறுவனத்தின் மூலம் மதுரை ஒத்தக்கடையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்தமிழ் பாரம்பரிய விளையாட்டு திருவிழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் கேடயங்கள் வழங்கப்பட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.
இதில் டர்னிங் பாய்ண்ட் டிரஸ்ட் நிறுவன ஹம்சி சுகன்யா, lifecare diagnostic நிறுவனர் சுப்புராஜ் மற்றும் துளசிராமன், அரசு பெண்கள் ஒத்தக்கடை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சசித்ரா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பாக நடத்தித்தனர்.
பாரம்பரிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகள் தங்களுக்கு கிடைத்த பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். இதுபோல் அனைத்துப் பள்ளிகளிலும், தமிழரின் பாரம்பரிய விளைாட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்து பள்ளி மாணவர்களின் விருப்பமாக உள்ளது.