கல்விசெய்திகள்

ஒத்தகடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு போட்டி

Traditional Sports Competition at Othakadai Panchayat Union Primary School

டர்னிங் பாயிண்ட் தொண்டு நிறுவனம் சார்பாக மதுரை கிழக்கு யா.ஒத்தகடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஊராட்சி தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜீவ முன்னிலை வகித்தார். டர்னிங் பாயிண்ட் டிரஸ்ட் நிறுவனர் ஹன்சி சுகன்யா பாரம்பரிய விளையாட்டுகள் அவற்றின் பயன்கள் குறித்து விளக்கம் கூறினார்.

மதுரை கிழக்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வி சிறப்புரை ஆற்றினார் தொடர்ந்து குழந்தைகள் பாரம்பரிய போட்டிகளில் சிறப்பாக கலந்து கொண்டனர். தன்னார்வலர் ஜோயல் ரோஷினி டைனி பிரின்ஸி மனோஜ் மணிகண்டன் ஆகியோர் போட்டியை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தனர்.

இதில் பச்ச குதிரை, கொல கொலையா முந்திரிக்கா, ஒரு குடம் தண்ணி ஊற்றி பாண்டி விளையாட்டு தட்டங்கள் மற்றும் அனிகாவையும் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றன. இதில் மாணவர்கள் மிக உற்சாகத்துடன் கலந்து கொண்டனர் ஆசீர் மாலா மோசஸ் சாந்தா மெர்சி ஹேமா சிலம்பம் ஆசிரியர் பாண்டி சமூக ஆர்வலர் பிரபு ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: