எஸ்டிபிஐ கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
Resolutions passed in SDPI party meeting

மதுரை மாவட்ட அலுவலகம் (வடக்கு) எஸ்டிபிஐ கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று 75,வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மாவட்ட தலைமையகம் மற்றும் அனைத்து கிளைகளிலும் தேசிய கொடியை ஏற்றி தியாகிகளை நினைவு கூறும் விதமாக தேசம் காக்கும் உறுதி மொழி ஏற்க தீர்மானிக்கப்பட்டன.
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள், மற்றும் ஆறு தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக செப்டம்பர் 3 -ஆம் தேதி சென்னையில், நடைபெற உள்ள சட்டமன்றம் நோக்கிய கருஞ்சட்டை பேரணியில் திரளானோர் கலந்து கொள்ள விவாதிக்கப்பட்டது.
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கிற்கு எதிராக அடிமை தனத்தை ஏற்க மறுப்போம்! என்ற முழக்கத்தோடு மாபெரும் பிரச்சார இயக்கம் துண்டு பிரசுரங்கள், சுவரொட்டி, பிரச்சாரங்கள், தெருமுனை கூட்டங்கள் இறுதியாக வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட இரண்டு தொகுதிகளில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது .
வருகின்ற செப்டம்பர் 10 முதல் அக்டோபர் 10 வரை தீவிர உறுப்பினர் சேர்க்கைகள் நடத்துவது பெரும்பாலான மக்களை கட்சியில் இனைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.