
எஸ் எஸ் எல் வி ராக்கெட் தயாரிப்புக்கு மென்பொருள் தயாரித்த, திருமங்கலம் பள்ளி மாணவிகள் அங்கு பார்த்த ருசிகர தகவல் மற்றும் செயற்கைக்கோள் சிக்னல் துண்டிப்பால் ஏற்பட்ட கோளாறால், ராக்கெட் செயலிழந்த சம்பவத்திற்கு வேதனை .
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 10 மாணவிகள் கடந்த ஏழாம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் எஸ்எஸ்எல்வி ராக்கெட் தயாரிப்புக்கு மென்பொருள் தயாரிப்பில் ஒரு பங்காக திகழ்ந்த திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள், செயற்கைக்கோள் வானில் ஏவும் காட்சிகளை நேரில் பார்த்த பின், அதன் ருசிகர தகவலை தெரிவித்தனர்.
அதனை வியப்புடன் கண்டுகளித்ததாகவும், செயற்கைக்கோள் சிக்னல் துண்டிப்பால் அந்த முயற்சி தோல்வி அடைந்ததற்கு மிகுந்த வேதனை அடைந்ததுடன், அடுத்த முயற்சியாக நாசாவில் பங்குபெற போவதாகவும் அதில் முழு வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதனுடைய ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவும் பணியில் பங்கு கொண்டதற்காக பள்ளி மாணவிகள் 10 பேரும் சான்றிதழ் பெற்றுள்ளனர்.