ஹலோ மதுரை நேயர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இன்னைக்கு நாம பாக்கப்போவது, மிக முக்கியமானது. ஆமாங்க பெட்ரோலைப் பற்றித்தான்.
இன்கை்கு பெட்ரோல் லிட்டர் ரூ.110 தாண்டி செம வேகத்துல பறக்குது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.150 வரை உச்சத்துக்கு போகும்னு புள்ளி விவரங்கள் சொல்றத கேட்டாளே தல சுத்துதுங்க. இப்ப இருக்குற பெட்ரோல் விலை பாத்தாக்கா கண்டிப்பா டெ்ரோல் விலை 150 தொட்டாலும் ஆச்சர்யமில்ல.
பெட்ரோல் விலை மலை போல ஒரு பக்கம் கிடுகிடுனு ஏறிக்கிட்டே போனாலும், அதை எப்படி போடுவது என்ற குழப்பம் நம்ம எல்லார்கிட்டையும் இருக்கு. அதாவது பெட்ரோல லிட்டர் கணக்கில் போடலாமா ? அல்லது ரூபாய் கணக்கில் போடலாமா ?
இந்தக் கேள்விக்கு சற்று விளக்கமாக பதில் சொல்லணும்னா, ரூபாய் கணக்கிலும் போட வேண்டாம். லிட்டர் கணக்கிலும் போட வேண்டாம். தயவு செய்து ஃபுல் டேங்க் போடுங்க அதுதான் நல்லது இலாபமும்.
அது எப்படினு இப்ப நம்ம பாப்போம்…
உதாரணமா நீங்க ஒரு மாசத்துல 100 ரூபாய் அல்லது 200 ரூபாய்க்கு சுமார் 7 அல்லது 8 முறை பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதாக வச்சுக்கோங்க, அப்டி ஒவ்வொரு முறையும் பெட்ரோல் போட பல்க் தேடி அலையும்போது, தேவையில்லாமல் பெட்ரோல் வீணாகும். இதுதான் முதல் நஷ்டம்.
அடுத்ததாக, ஒவ்வொரு பிராண்டு வாகனத்துக்கும் ஒவ்வொரு கம்பெனி பெட்ரோல் பெஸ்ட்டா இருக்கும். அதாவது இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், எச்பி, ஸ்பீட், ரிலையன்ஸ், எஸ்ஸார் …. ஸ்ப்பா… இப்படி ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் போடும்போது என்ஜினின் இயக்கம் வேறு வேறு சத்தங்களை உண்டாக்கும். இதெல்லாம் பைக், கார் பத்தி நல்லா தெரிஞ்ச ஒருத்தவர் சரியா கண்டுபிடிச்சுடுவார்.
ஆனா, நீங்களே யோசித்துப் பாருங்க, ஒரு மாசத்துல… இப்படி… மாறி மாறி பல பெட்ரோல் பல்க்குல பெட்ரோல் போட்ருப்போம். இப்படி பல்க் மாத்தி மாத்தி போட்டாலும், மைலேஜ் மைனஸ் ஆகும். அதாவது கண்ட கண்ட ஹோட்டல்ல சாப்பிடும் வயிறு மாதிரி.
அதனால ஒரே இடத்தில் டேங்க் முழுசா பெட்ரோல் நிரப்பினால் வாகனமும் நன்றாக இருக்கும். மைலேஜ் செம்மையா கிடைக்கும். முக்கியமா அடிக்கடி பெட்ரோல் பல்க் தேடி அலைய வேண்டிய அவசியமே இல்ல.
அதேபோல, ஒவ்வொரு மாதமும் வீட்டு வாடகை, பால், மின்சாரக் கட்டணம் இதுகளுக்கெல்லாம் கண்டிப்பாக பணம் கொடுப்பது போல், பெட்ரோலுக்கும் ஒரு முறை சுமார் 1000 ரூபாய் ஒதுக்கி, ஒரே இடத்தில் போட்டாபோதும், குறைந்தது 15 நாட்களுக்கு எதப் பத்தியும் யோசிக்காம நம்ம வேலைய பாத்துக்கிட்டே இருக்கலாம்.
அப்புறமா மாதக்கடைசியில் ஒரு முறை போட்டால் போதும். அத்தோட கையில் காசு இல்லாத நேரத்துல வீட்டல அம்மாவை தொந்தரவு செய்து, சமையல் பாத்திரங்களை திறக்கும் சங்கடங்களும் வரேவே வராது.
இதுதான் பெட்ரோலை மிச்சப்படுத்தும் முறை. நா சொன்னமாதிரி இரண்டு மாசத்துக்கு செஞ்சு பாருங்க, கண்டிப்பாக பலன் இருக்கு. பெட்ரோல் ஃபுல் டேங்கா இருந்துச்சுன்னா, ரதமாட்டம் வண்டி தரமா போகும்.
இதுல முக்கிய விசயம் என்னென்ன அதிகாலை நேரத்துல பெட்ரோல் நிரப்புரதும், உங்க வண்டிக்கு ஏத்த ஒரே பெட்ரோல் பல்க்க தேர்ந்தெடுப்பதும் கூடுதல் பலன் அளிக்கும் அப்டீங்கிற தகவல சொல்லிட்டு,
அடுத்த வீடியோவில் மைலேஜ் அதிகமாக கிடைக்க வேற என்னெல்லாம் செய்யலாம் அப்டீங்கிற விசயத்தோட உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது ஹலோ மதுரை ரமேஷ் நன்றி வணக்கம்.