எதிர்வரும் ஆகஸ்ட் 02ந் தேதி மேயர் தலைமயைில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் | மனுக்கள் கொடுக்க அழைப்பு
Public grievance redressal camp will be held on August 2nd under the chairmanship of the mayor Call for submissions

மதுரை மாநகராட்சி பகுதிகளில், உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மதுரை மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஆணையாளர் அவர்களிடமும், அந்தந்த மண்டல அலுவலகங்களில் உதவி ஆணையாளர்களிடம் நேரடியாக மனுக்களாக கொடுத்து பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், மாநகராட்சியின் அழைப்பு மையம், வாட்ஸ்அப், முகநூல் ஆகிய தகவல் தொழில்நுட்ப முறையிலும் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
அதன்படி, எதிர்வரும் 02.08.2022 (செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலம் 4 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.
(மண்டலம் 4 (தெற்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: வார்டு எண்.29, செல்லூர், வார்டு எண்.30 ஆழ்வார்புரம், வார்டு எண்.41 ஐராவதநல்லூர், வார்டு எண்.42 காமராஜர் சாலை, வார்டு எண்.43 பங்கஜம் காலனி, வார்டு எண்.44 சேர்மன் முத்துராமய்யர் ரோடு, வார்டு எண்.45 காமராஜபுரம், வார்டு எண்.46 பழைய குயவர்பாளையம், வார்டு எண்.47 சின்னக்கடை தெரு, வார்டு எண்.48 லெட்சுமிபுரம், வார்டு எண்.49 காயிதேமில்லத் நகர், வார்டு எண்.53 செட்டியூரணி, வார்டு எண்.85 கீழவெளிவீதி, வார்டு எண்.86 கீரைத்துறை, வார்டு எண்.87 வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வார்டு எண்.88 அனுப்பானடி, வார்டு எண்.89 சிந்தாமணி, வார்டு எண்.90 கதிர்வேல் நகர் ஆகிய வார்டுகள்)
இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.