
பள்ளியில் யூனிபார்ம் வாங்க முடியவில்லை என்பதால் மனம் உடைந்த 6ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை அருகே ஊமச்சிகுளம் வீரபாண்டி காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் அக்சய சீனியா 11. இவர் மதுரை சொக்கிகுளத்தில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். அவருடைய யூனிபார்மை பள்ளியிலிருந்து வாங்கவில்லை. அவர் அம்மாவிடம் கேட்டும் வாங்க முடியவில்லை. இதனால் மனமடைந்த அக்சயசீனியா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து ஊமச்சிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1