உலக ஸ்கேட்டிங் சம்பியன்ஷிப் போட்டி | மதுரையை சேர்ந்த பள்ளி மாணவிகள் தேர்வு
World Skating Championships | School girls from Madurai exam

மதுரை பொன்னகரத்தை சேர்ந்த ரேஷ்மாஸ்ரீ, நரிமேடு பகுதியை சேர்ந்த ஸாகினி ஆகிய இருவரும் 10ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
கடந்த 8 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் விளையாடி வரும் இருவரும் மாநில அளவிலும் தேசிய அளவிலும் 80க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளனர். ஸ்கேட்டிங் விளையாட்டில் ரோலர் ஹாக்கி போட்டி, ரோலர் டெர்பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருவரும் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து தற்பொழுது முதல் முதலாவதாக இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளனர்.
இந்திய அணிக்கு தேர்வாகி உள்ள இருவரும் வரும் அக்டோபர் மாதம் அர்ஜென்டினாவில் நடைபெற உள்ள உலக ஸ்கேட்டிங் சம்பியன்ஷிப் தொடரின் ரோலர் ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாட உள்ளனர்.
இவர்களை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நேரில் அழைத்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் பொருளாதாரத்தில் தாங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளதால் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க அர்ஜெண்டா சென்று வருவதற்கான செலவினை அரசை ஏற்க வேண்டும், அல்லது தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள் முன் வந்து தங்களுக்கு உதவி செய்தால் கண்டிப்பாக இந்தியாவுக்கு பெருமை சேர்ப்போம் என்றனர்.