உரம், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறக்க அனுமதி
Fertilizer and pesticide shops are allowed to open from 6 a.m. to 10 p.m.

மதுரை மாவட்டத்தில் குறுவை சாகுபடி ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் தங்கு தடையின்றி உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் இதர விவசாய இரு பொருட்கள் பெற்றுக் கொண்டு விவசாய பணிகளை முழுமையாக செய்து பயனடைய புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தனியார் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையாளர்கள் கொரோனா கால பொது முடக்கம் இருக்கும் வரை தினந்தோறும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கடைகளை திறந்து வைத்து விவசாயிகளுக்கு தேவையான உரம் பூச்சிக்கொல்லி மருந்துகள் விதைகள் மற்றும் விவசாய பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனையாளர்கள் அரசு தெரிவித்துள்ள நோய்த்தொற்று வமிகாட்ரூதலின்படி கீழ்கண்ட விதிமுறைகளை தவறாது கடைபிடித்து விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் அவர்களால் கேட்ருக்கொள்ளப்படுகிறது. அதன் விவரங்கள்
1) உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பவர் மற்றும் வாங்குபவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றியும் விநியோகம் செய்ய வேண்டும்.
2) அனைத்து கடைகளிலும் கிருமி நாசினி தவறாது உபயோகிக்க வேண்டும்.
3) கடைகளில் விலைப்பட்டியல் மற்றும் இருப்பு விவரம் தவறாது வைக்க வேண்டும்.
4) விற்பனை முனை கருவிகளில் இருப்பு மற்றும் விற்பனை தினந்தோறும் முறையாக பதியப்பட்ரு விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள தகவல்களை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் தெரிவித்துள்ளார்.