அரசியல்செய்திகள்

உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி | சோழவந்தான், அலங்காநல்லூர் பகுதி ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

High Court judgment echo | Cholavanthan, Alankanallur area OPS team administrators celebrated with fireworks

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே தொடரும் என்று உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சோழவந்தான் மாரியம்மன் கோவில் முன்பாக அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

இதில் சோழவந்தான் பகுதி நிர்வாகிகள் ராமசாமி, தென்கரை திரவியம், கட்டக்குளம் வேலுச்சாமி, சோழவந்தான் பேரூர் முத்து, டீக்கடைராஜேந்திரன், மார்க்கெட் ராஜேந்திரன், ஆடியோ ராஜன், மீன் ஜெயபாண்டி, பேட்டை விஜயன் ,மகேந்திரன், கல்லணை ,இரும்பாடி ஈஸ்வரன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்

இதேபோல் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பஸ் நிலையம் முன்பாக, அமைந்துள்ள தேவர் சிலை அருகே கல்லணை ஊராட்சி மன்றத் தலைவர் சேது சீனிவாசன் தலைமையில், ஓ.பி.எஸ்.க்கு நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்ததை ஒட்டி, தர்மமே வென்றது என க்
கூறி, இனிப்பு வழங்கினார்.

இதில், முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் குனபாண்டியன், கிளைச் செயலாளர் கருப்பணன், கல்லணை சரவணன், முனியசாமி சரவணன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: