
உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் 07.06.2022-அன்று நடந்த விழாவில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் 4-வது மாநில உணவு பாதுகாப்பு குறியீடு 2021-2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் உணவு பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை சிறப்பாக செய்த 75 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் மதுரை உட்பட 11 மாவட்டங்கள் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டதற்கான பாராட்டு சான்றிதழ் சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (15.06.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் அவர்களிடம் இந்த பாராட்டு சான்றிதழை நியமன அலுவலர் மரு.V.ஜெயராமபாண்டின் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
மதுரை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு பணியில் சிறப்பாக தொடர்ந்து செயல்பட மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர்,வாழ்த்து தெரிவித்தார்.