ஃபிட்னஸ்பெண்கள்

உடல் பருமனும், பசியும்

உங்கள் உடல் சுரக்கும் ஹார்மோன்கள் தான் முதல் காரணம் ஆகும். சர்க்கரை மிகுந்த மாவுச்சத்து உணவுகள் தான் அதிகப்படியான பசியை திரும்பத்திரும்ப ஏற்படுத்துகின்றன. ஏனென்றால், சர்க்கரை மிகுந்த உணவுகளை நம் உடலுக்கு கொடுக்கும்போது நம் உடல் எண்டார்பின் (endorphin) என்ற ஹார்மோனை சுரக்கின்றது. இந்த ஹார்மோன் உடலுக்கு தற்காலிகமான சுகத்தை தருகின்றது. ஆனால் சர்க்கரையோ விரைவாக செரிமானம் ஆகி விரைவாக நம் வயிற்றை விட்டு வெளியேறுகிறது. இப்போது சுரக்கும் பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் மேலும் சர்க்கரையை கேட்டு மூளைக்கு சமிஞையை அனுப்புகிறது.

அகோரப்பசியை கட்டுப்படுத்தும் சில வழிமுறைகள் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.டையட் என்ற பெயரில் உண்ணாவிரதம் எதுவும் இருக்காதீர்கள். உடல் நிறைய உணவை கேட்டால் அதற்கு கொடுத்துவிடுங்கள். எப்போது சாப்பிட்டாலும் குறைந்த அளவிலேயே உணவை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கு பதில் சின்னச்சின்ன அளவுகளில் ஆறு வேலையாக உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.

மாலை சீக்கிரம் உறங்கச்செல்லுங்கள், அதே போல அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதிகாலையில் எழுந்திருப்பது மிகுந்த பலனளிக்கும் ஒரு செயல் என்று பல வெற்றியாளர்களும், சாதனையாளர்களும் சான்றளிக்கிறார்கள். அதிகாலையில் யோகா, ஜிம், நடைபயிற்சி போன்றவற்றை செய்யலாம். நல்ல கொழுப்பு அதிகமுள்ள உணவுகளான கோழிக்கறி, மீன், முட்டை, சீஸ் என்று சொல்லப்படும் பாலாடைக்கட்டி, போன்ற உணவுப் பொருட்களை மிதமாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

four × three =

Related Articles

Close