செய்திகள்மாநகராட்சி

இல்லம் தேடி கல்வித் திட்டம் வாசித்தல் மாரத்தான் | மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு

Home Search Education Program Reading | Kudos to Madurai Corporation School teachers

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இல்லம் தேடி கல்வி திட்டம் 2022 என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் ஆங்கிலத் திட்டத்தில் வீட்டு வாசலில் கல்வி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைப்பதைக் நோக்கமாக கொண்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரிசெய்வதற்கான இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப் பட்டது.

அதன் படி கொரோனா காலத்தில் மாணவ, மாணவியர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்குவதற்கு தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் Reading Marathany சிறப்பாக பணியாற்றியமைக்காக மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு வெற்றிக்கோப்பை மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.அனீஷ் சேகரால் வழங்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி மேற்கு பகுதிகளுக்கு உட்பட்ட 18 மையங்களில் 540 மாணவர்களும், தெற்கு பகுதிகளுக்கு உட்பட்ட 156 மையங்களில் 4000 மாணவர்களும், வடக்கு பகுதிகளுக்கு உட்பட்ட 1285 மையங்களில் 3840 மாணவர்களும், கிழக்கு பகுதிகளுக்கு உட்பட்ட 77 மையங்களில் 2310 மாணவர்களும், திருப்பரங்குன்றம் பகுதிகளுக்கு உட்பட்ட 56 மையங்களில் 1680 மாணவர்களும் என மொத்தம் 435 மையங்களில் 12370 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். மேலும் 5 மாநகராட்சி ஆசிரியர்கள் இத்திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகின்றனர்.

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் வாசித்தல் மாரத்தானில் சிறப்பாக பணியாற்றியமைக்காக பெற்ற வெற்றி கோப்பையை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் காண்பித்து வாழ்த்துக்கள் பெற்றனர். இந்நிகழ்வில் மாநகராட்சி கல்வி அலுவலர் நாகேந்திரன், பள்ளி ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

மு,இரமேஷ் குமார்

மு.இரமேஷ்குமார். ஹலோ மதுரை மாத இதழின் நிறுவனர். நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: