
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 71 வது வார்டு மாடக்குளம் மெயின் ரோடு பெரியார் நகர் ஆகாஷ் தெரு பெரியார் கிழக்கு குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தெரு விளக்குகள் எரியவில்லை சம்பந்தப்பட்ட கவுன்சிலரிடமும் மாநகராட்சி அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
இதனால் மாலை ஆறு மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே வர அஞ்சுகின்றனர் மேலும் இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
காவல்துறை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் தெரியாமல் இருப்பது சமூக விரோதிகளுக்கு மேலும் ஊக்கத்தை கொடுப்பதாக தெரிகிறது பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் தெரு விளக்குகளை ஏறிய விட்டு பொதுமக்கள் நலன் காக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா விடியல் கிடைக்குமா என எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள்.