ஆரோக்கியம்பெண்கள்

இப்படித்தான் குளிக்க வேண்டும்

காலையில் குளிக்கும்போது, சுடுநீரைப் பயன்படுத்தாமல், சாதாரண நீரையே பயன்படுத்தவேண்டும், நீரை முதலில் காலில் இருந்து ஊற்றி, பிறகு தொடை மற்றும் இடுப்பில் அதிக நீர் ஊற்றி, தண்ணீரின் அந்த வெப்பநிலையை, உடல் ஏற்க தயார்செய்யவேண்டும், மாறாக, தலையில் நேரடியாக தண்ணீரை ஊற்ற, திடீர் குளிரால் ஏற்படும் வெப்ப மாறுதலால், சுவாசம் பாதிக்கும் நிலை உண்டாகி, வாயால் மூச்சு விடும் நிலை ஏற்பட்டு, உடல் இயக்கம் சற்று பாதிக்கும் வாய்ப்பு உண்டாகிவிடும், மேலும், குளிக்கும்போது எப்போதும், சிறிது நீரை உச்சந்தலையில் ஊற்றிவிட்டு, அதன்பின் குளியலைத் தொடங்குதல், நலம்.

உடலின் தலைமைச் செயலகம், மூளையாகும், காலில் இருந்து நீரை ஊற்றி குளித்துவரும்போது, உடலின் வெப்பம் மூக்கு மற்றும் கண்கள் வழியே வெளியேறும், மாறாக தலையில் ஊற்றிக் குளிக்கும்போது, உடலில் உள்ள வெப்பம் மற்ற பாகங்களின் வழியே வெளியேற வாய்ப்பில்லாமல், தலையில் சேர்ந்து, அதனால், உடல் சூடு அதிகரித்து விடுகிறது. இப்படி எத்தனை முறை குளித்தாலும், உடல் சூடு தீர்வதில்லை, எனவே இதனைத் தவிர்க்க, காலில் இருந்து குளியலைத் தொடங்கவேண்டும்.

உடலில் தேய்த்து குளிக்க இயற்கை பச்சைப்பயிறு மாவு, கடலைமாவு இவற்றை சிறிது மஞ்சள் சேர்த்து தேய்த்து குளித்து வந்தாலே போதும், உடல் அழுக்கும் நீங்கி, தொற்று பாதிப்புகளும் விலகிவிடும். இதுபோல, தலைக்கு குளிர்ச்சியூட்டும் சந்தனாதித் தைலம் அல்லது செம்பருத்தித் தைலம் தடவி குளித்துவர, உடல் சூடு தணிந்து, தலைமுடி உதிர்தல் நின்று, தலைமுடி நன்கு வளரும்.குளித்தவுடன், உடனே உடைகளை அணியாமல், சற்றுநேரம் ஈரத்துண்டுடன் இருப்பது, உடலில் உயிர்காற்றை சீராகப் பரவச்செய்து, மன நலம் பாதித்தவர்களைகூட, நலம் பெற வைத்துவிடும் என்கின்றனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

eleven − 10 =

Related Articles

Close