இன்று முதல் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி
Madurai News

மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 17,02.2021ந் தேதி புதன்கிழமை முதல் அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் ரெிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறி்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் பக்தர்கள் வழிபாட்டிற்காக (17,02.202) முதல் காலை 5.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும் மாலை. 400 மணி முதல் இரவு 9.00 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் மற்றும் பொது மக்கள் சுவாமி தரிசனத்திற்கு அம்மன் சன்னதி கிழக்கு, தெற்கு, மேற்கு, மற்றும் வடக்கு நான்கு கோபுரங்கள் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.
அனைத்து வயதினரும் திருக்கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் மற்றும் பொது மக்கள் திருக்கோயிலுக்கு வரும் சமயம் தங்களுடைய(செல்போன்) கைபேசியை திருக்கோயிலுக்குள் கொண்டு வர அனுமதியில்லை.பக்தர்கள் திருக்கோயிலுக்குள் பூ, மாலை கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது.
மேலும்,பக்தர்கள் மற்றும் பொது மக்கள் திருக்கோயிலுக்குள் அம்மன் சன்னதி கிழக்கு
வாயிலுக்குள் நுழைந்து அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், இருட்டு
மண்டபம், பொற்றாமரைக்குள கிழக்குப் பகுதி, தெற்குப்பகுதி மற்றும் கிளிக்கூடு மண்டபம்,
கொடிமரம் வழியாக அம்மன் சன்னதிக்குள் உள்ளே நுழைந்து தரிசனம் செய்துவிட்டு பின்
சுவாமி சன்னதி சென்று தரிசனம் செய்து சனீஸ்வரர் சன்னதி, அக்னி வீரபத்திரர், அகோர
வீரபத்திரர், பத்திரகாளி அருகில் உள்ள வழியில் வெளியில் வந்து பழைய திருக்கல்யாண
மண்டபம் வழியாக அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக வெளியே செல்ல
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு திருக்கோயிலில் எந்த ஒரு இடத்திலும் உட்கார அனுமதி
கிடையாது. பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்தும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மீனாட்சி திருக்கோவில் இணை ஆணையர்/செயல் அலுவலர் சி.குமரதுரை தெரிவித்துள்ளார்.