செய்திகள்மாநகராட்சி

இன்று முதல் மதுரை மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு | மதுரை மாநகராட்சியின் 70-வது ஆணையர்

New Commissioner of Madurai Corporation assumes charge from today

மதுரை மாநகராட்சி புதிய ஆணையாளராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் (01.06.2022) இன்று முதல் பொறுப்பேற்றுள்ளார்.

பழைய மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் உறுப்பினர் செயலாளராக பணியிட மாற்றம்.

மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் 14.06.2021 அன்று 69-வது ஆணையராக பொறுப்பேற்றார். இளம் வயது ஆணையர் என்பதால் சுறுசுறுப்போடு செயல்பட்டு மாநகராட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார் என பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

ஆனால், கார்த்திகேயன் பொறுப்பேற்ற பிறகு மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக நிதி தட்டுப்பாடு, மாநகராட்சி திட்டப் பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் பெரிய அளவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.

அதேநேரத்தில் கார்த்திகேயன் ஆணையராக பதவியேற்றது முதல் குடிநீர், பாதாள சாக்கடை, தெரு விளக்கு போன்ற அடிப்படை பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தார். இதனால் மதுரை நகரில் குடிநீர் விநியோகம் சீரானது.

அடிப்படையில் ஆணையர் கார்த்திகேயன் மருத்துவர் என்பதால் சுகாதார மேம்பாடு பணிகளிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

பெரியார் பேருந்து நிலையம், அடுக்குமாடி வாகன காப்பகம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆன்லைன் வாயிலாக மாநகராட்சி பணிகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டார்.

இந்நிலையில், மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் உறுப்பினர் செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையராக சென்னை மாநகராட்சியின் தெற்கு வட்டார துணை ஆணையராக பதவி வகித்த சிம்ரன்ஜீத் சிங் காலோன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை மாநகராட்சியின் 70-வது ஆணையராக இன்று பதவி ஏற்றுள்ளார்.

மதுரை மக்களுக்கு சிறந்த பணியாற்ற ஹலோ மதுரை சார்பில் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: