இனிப்புஉணவு

இனிக்கும் பாதாம் பர்ஃபி

எல்லோருக்கும் வணக்கம் நான் உங்கள் கமலி… பாதாம் பர்பி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடிதத இனிப்பு வகை. இந்த பாதாம் பர்பியை கடைகளில் வாங்கிச் சாப்பிடுவதை விட நம் வீட்டிலேயே மிக எளிமையாக செய்யலாம். அது எப்படி என்பதை இங்கு காண்போம். மறக்காமல் இதை ஒரு முறை டிரை பண்ணி பாருங்க… அருமையாக இருக்கும். வாங்க இப்ப பாதாம் பர்பி எப்படி செய்வது என்று பார்ப்போம்…

தேவையான பொருட்கள் :

பாதாம் பருப்பு – 200 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
நெய் – 400 கிராம்

செய்முறை:

இதைச் செய்வது ரொம் ரொம்ப ஈசி, முதலில் பாதாம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர், தோலை நீக்கிவிட்டு நைசாக அரைக்கவும். பிறகு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கம்பிப் பாகு வந்தவுடன் அரைத்த பாதாமை சேர்த்து நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். நன்றாக இறுகியதும் நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி சிறு சிறு துண்டுகள் போட வேண்டும். அவ்வளவுதான். எல்லோருக்கும் பிடித்தமான சுவையான தித்திக்கும் பாதாம் பர்பி ரெடி.

Show More

Leave a Reply

Your email address will not be published.

four + 9 =

Close