#Vermicompost #Vermifarm #SACSVANYA
குறிப்பு: வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ள சென்னை தொலைபேசி எண் மாறிவிட்டது. ஆதலால் அதற்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். சென்னை முகவரி மற்றும் தொலைபேசி எண் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
🔵 Chennai store 🔵
9 Mahalingapuram main road, GF Vinayak Mansion, Nungambakkam, Chennai 600034
Ph – 9840988845
பயண அனுபவம்
கடந்தாண்டு (2021) நவம்பர் 8ந் தேதி எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு உயர்திரு.அனுஷ்யா அவர்கள் தொடர்பு கொண்டு எங்கள் சாக்ஸ் மண்புழு உரத் தொழிற்சாலை குறித்து வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நாமும் அதற்கு ஒப்புக் கொண்டோம். ஆனால் மழை காரணமாக தள்ளி சென்று கொண்டே இருந்தது.
கடைசியாக 12.02.2022 அன்று எனது மனைவியுடன் சென்று இருந்தேன். அன்றைக்கும் கிளம்பும்போது வானிலை கருத்துக் கொண்டுதான் இருந்தது. இருப்பினும் மழை வராது என்ற நம்பிக்கையில் மதுரை சிந்தாமணியில் அமைந்துள்ள சாக்ஸ் உரத் தொழிற்சாலைக்குச் சென்றோம். சாக்ஸ் ஜெனரேட்டர், பீரோ தயாரிப்பு தொழிற்சாலைக்குள்தான் மண் புழு உரம் தயாரிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொண்டோம். மிகப் பெரிய இடம்.
அன்றைய தினம் திரு.அனுஷ்யா அவர்கள் வெளியில் கிளம்புவதாக கூறியிருந்தார்கள். ஆனால் சில காரணங்களுக்காக தாமதம் ஆகிவிட்ட நிலையில், அவர் அங்கிருக்க, நம்மை அன்புடன் வரவேற்றார். வடக்கில் இருந்து வந்தவர்கள் என்று அவர் பேச்சில் நினைத்தேன். ஆனால், தான் மதுரையில் பிறந்ததாகவும், சென்னையில் வளர்ந்ததாகவும் தெரிவித்தார்.
திரு.அனுஷ்யா அவர்களை பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், தனது தாத்தா வின் கனவை இன்னும் வலுப்படுத்த வேண்டும் என்ற ஆவலும், இயற்கை மீதிருந்த அன்பும் தெளிவாக தெரிந்தது. சாக்ஸூ வான்யா என்ற பெயருக்கு மிகப் பெரிய விரிவாக்கம் எனக்கு அளித்த விதத்தில் அதை புரிந்து கொண்டேன்.
முக்கியமாக லாக்டவுன் நேரத்தில் தொட்டில் அமைப்பு எனும் புதிய முறையை மயற்சி செய்து அதில் மண்புழு உரம் எடுத்து வருகிறார். நிச்சயமாக எதிர் காலத்தில் இது நல்ல பலனை கொடுக்கும் என்ற நம்பிக்கை என்கும் உண்டு.
முதன் முறையாக எனது மனைவியை அழைத்துச் சென்றது நல்ல பலன் அளித்தது. எனக்கு உதவியாக இருந்தார்கள். அவர்களும் இதை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சரி விசயத்திற்கு வருகின்றேன். சாக்ஸ் உர ஊழியர்கள் அனைவரும் மிக எதார்த்தமாக பழகினார்கள். உரம் குறித்தும், 25 ஆண்டுகள் அனுபவம் குறித்துத் எனக்கு விளக்கம் அளித்தார்கள்.
இங்கு சாணத்தை மட்டுமே பயன்படுத்தி மண் புழு உரம் தயாரிக்கப்படுகிறது. பல நகைச்சுவையான விசயங்களும் அங்கு நிகழ்ந்தது. அதற்கு காரணம் திரு.திருமுருகன் சார் தான். ஆப்பிரிக்கா மண் புழு பற்றி கூறிய விதம்தான். நல்ல அருமையான மனிதர். கூடவே ஒரு தம்பியும் அப்படி ஒரு ஆர்வமாக இருந்தார். அவர் வீடியோவில் வருவார்.
முதலில் திரு.அனுஷ்யா அவர்கள் சிறியதாக பேச அழைத்தோம். அதை மிக மிக சரியாக பேசி எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டார். அதனை தொடர்ந்து தான் கூடதலாக அவரிடம் பேட்டி எடுத்தேன். மறுபடியும் பேட்டிக்கு அழைக்க மழை வந்துவிட்டது. அதன் பிறகுதான் தொழிற்சாலைக்குள் வைத்து பேட்டியை நிறைவு செய்தோம். அந்த தகவலை நீங்கள் வீடியோவில் கேளுங்கள்.
இயற்கை மீது திரும்பியிருக்கும் திரு.அனுஷ்யா அவர்களுக்கு எங்களது பாராட்டுக்கள் மற்றும் உதவியும் எப்போதும் உண்டு. அவரின் தாத்தா வீட்டு தோட்டத்தின் தேவைக்கு ஆரம்பித்த உரத் தயாரிப்பு இன்றைக்கு, இந்தியா முழுவதும் கிடைக்கும் என்ற தூரத்தை கடந்திருப்பது மகிழ்ச்சிக்கு உரியது.
விவசாயிகளுக்கு அதிக நன்மை தரும் இயற்கை உரங்களை வாங்கி, ஆதரவு கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். திரு.அனுஷ்யா அவர்களின் மாதம் 100 டன் உர உற்பத்தி என்ற இலக்கை அடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
🔵 Madurai farm 🔵
#3/314 Rajamaan nagar, Chinthamani main road, Madurai 625009
Ph – 9842174333
🔵 Chennai store 🔵
9 Mahalingapuram main road, GF Vinayak Mansion, Nungambakkam, Chennai 600034
Ph – 9840988845
🔵 Website: https://sacs-vermicastings.business.site/
🔵 SACS VANYA LOCATION: https://g.co/kgs/PvitMV
___________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
Hello Madurai Raj – 📞 6382333644 ( Camera Man )
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
🔵 App Link: https://play.google.com/store/apps/details?id=com.lone.anew&hl=en_IN&gl=US
🔵Online Web Tv : https://hellomaduraitv.com/
🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv
🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/
🔵 Agri News website : https://tamilvivasayam.com/
🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/
🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________