இயற்கை மருத்துவம்மருத்துவம்

இடுப்பு வலிக்கு இயற்கை மருத்துவம்

இடுப்பு வலி குணமாக கொள்ளு முக்கிய பங்கு வகிக்கிறது. அதோடு கொள்ளை உண்பதால் உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். இடுப்பு வலி உள்ளவர்கள் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிட்டு வர இடுப்பு வலி நீங்கும்.

சுக்கு, மிளகு, கிராம்பு ஆகிய மூன்றும் இடுப்பு வலி குணமாக பெரிதும் உதவருகிறது. ஒரு கிராம் சுக்கு, ஐந்து மிளகு, ஐந்து கிராம்பு ஆகிய மூன்றையும் பயன்படுத்தி தேனீர் செய்து தினமும் இருவேளை குடித்து வர இடுப்பு வலி நீங்கும்.வெற்றிலையை நன்கு பிழிந்து சாறு எடுத்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து இடுப்பு வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி குறையும்.

எள் எண்ணெயோடு பூண்டு மற்றும் தளுதாளி இலை சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.  பூண்டை இடித்து போட்டு நல்லெண்ணெயில் நன்கு காய்ச்சி வடிகட்டி இடுப்பு வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி நீங்கும். மேலே உள்ள குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி இடுப்பு வலியில் இருந்து விடுபடலாம். அதோடு அதிக நேரம் அமர்ந்து பணி செய்வோர் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடக்கலாம். இதன் மூல இடுப்பு வலியை வரமால் தடுக்க முடியும்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

thirteen − thirteen =

Related Articles

Close