ஆவின் டெப்போக்களில் விலை கூடுதலாக விற்பனை செய்தால் உரிமம் ரத்து | மதுரை ஆவின் பொது மேலாளர் எச்சரிக்கை
License canceled if the price is increased in the depots Madurai General Manager alert

மதுரை மாவட்ட ஒன்றியத்திலிருந்து நாளொன்றுக்கு சராசரியாக 2 இலட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவைகளில் பெரும்பான்மையானவை டெப்போக்கள் மற்றும் பாலகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் பயன்பெறும் வகையில் பால் விலை லிட்டருக்கு ரூ.3 சதவிகிதம் குறைத்து அறிவித்ததற்கு பின்பு தற்பொழுது சுமார் 14,000 லிட்டர் விற்பனை உயர்ந்துள்ளது.
டெப்போக்களில் விற்பனை விலையை விட கூடுதலாக விற்பனை செய்தாலோ, ஆவின் பொருட்கள் அல்லாது பிற பொருட்கள் விற்பனை செய்தாலோ டெப்போ முகவரின் உரிமத்தை ரத்து செய்து ஆணை வழங்குமாறு பால் வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தற்பொழுது ஆவின் நற்பெயரை கெடுக்கும் வண்ணம் செயல்படும் டெப்போ மற்றும் பாலக உரிமையாளரின் உரிமம் நீக்கம் செய்து தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆவின் விழிப்புணர்வு குழு ஆய்வு அறிக்கை பேரில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் செயல்படும் டெப்போ எண்.910-ன் முகவரின் உரிமமானது ரத்து செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இனி வரும் காலங்களிலும் இதுபோன்ற குற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் முகவரின் உரிமமானது ரத்து செய்யப்படும் என ஆவின் பொது மேலாளர் சாந்தி தெரிவித்துளார்.