செய்திகள்மாநகராட்சி

ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதிகளில் தீவிர தூய்மைப்பணிகள் | மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார்

Alvarpuram Intensive cleaning works in Vaigai river areas Mayor V. Indrani Ponvasant inaugurated it

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.30 ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதிகளில் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தீவிர தூய்மைப்பணிகளை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், (23.07.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி 2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தொடங்கப்பட்டு மதுரை மாநகராட்சி பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று (23.07.2022) ஆழ்வார்புரம் வைகை வடகரை, மதிச்சியம் பகுதிகள், குருவிக்காரன் சாலை பாலம் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஓபுளாபடித்துறை பகுதிகள், ஆர்.ஆர்.மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தூய்மைப்பணிகள் மேற்;கொள்ளப்பட்டது. இந்த தூய்மைப்பணி துவக்கத்தில் தூய்மை குறித்த உறுதிமொழியினை மாண்புமிகு மேயர் அவர்கள் தலைமையில் அனைத்துப் பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர். இந்த தூய்மைப்பணியில் சுமார் 200 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தொடர்ந்து மாட்டுத்தாவணி நெல் மற்றும் மலர் வணிக வளாக அலுவலகத்தில் ஆதரவற்ற பெண்களுக்கான பயிற்சி பட்டறையினை மாண்புமிகு மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்து உரையாற்றினார்.

இந்நிகழ்வில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் முகேஷ்சர்மா, சரவணபுவனேஸ்வரி, சுவிதா, துணை ஆணையாளர் முஜிபூர்ரகுமான், உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், உதவி நகர்நல அலுவலர் தினேஷ் குமார், சுகாதார அலுவலர்கள் விஜயகுமார், சிவசுப்பிரமணியன், வீரன், சுகாதார ஆய்வாளர்கள், உதவிப் பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: