
தமிழக முழுவதும் தென்மேற்கு பருவமழையானது பெய்து வருகிறது. இதனை ஒட்டி எச்சரிக்கை நடவடிக்கையாக நீர் நிலைகளில் மற்றும் வெள்ளத்தில் சிக்கிய இவர்களை மீட்பது குறித்து போலியான ஒத்திகையானது நடைபெற்றது.
தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு மதுரை மாவட்டம் அலுவலர் வினோத் குமார் உத்தரவுபடி, மதுரை மாவட்டம் திருமங்கலம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் போலியான ஒத்திகையானது நடைபெற்றது.
ஆலம்பட்டி கல்குவாரியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பங்குபெற்று நீர்நிலைகளுக்கு அருகே குழந்தைகள் செல்லக்கூடாது எனவும், குழந்தைகள் சிக்கினால் எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் மேலும், வெள்ளத்தில் போது பாதிப்பு ஏற்பட்டால் எந்தெந்த பொருட்களை வைத்து பயன்படுத்தி நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம் என போலியான ஒத்திக்கையானது நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த ஒத்திகை அளவு எங்களுக்கு மிகச் சிறப்பாக இருந்தது எனவும், மிகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் செய்து காட்டியது எங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்களும் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.