ஆற்றில் மூழ்கிய ராணுவ வீரரை தேடும் பணி | சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பார்வையிட்டு ஆய்வு
Search for a soldier who drowned in the river Cholavanthan Member of Legislative Assembly Venkatesan visited and inspected

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் வைகை ஆற்றில் நேற்று மாலை குளிக்க சென்ற ராணுவ வீரர் உட்பட இருவர் மாயமானதை தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் வைகை ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை ஒருவரை பிணமாக மீட்டனர்.
ராணுவ வீரரான, மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ,மீட்பு பணியினை பார்வையிட்ட சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, சோழவந்தான் காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையை சேர்ந்த அதிகாரி களிடம் தேடும் பணியை தீவிரப் படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
இதில் ,சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், மாணவரணி மருதுபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், சோழவந்தான் பேரூர் செயலாளர் ஸ்டாலின், பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் அண்ணாதுரை, நிர்வாகி சி பி ஆர் சரவணன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி,
மாணவர் அணி எஸ்.ஆர். சரவணன், மேலக்கால் பன்னீர்செல்வம் உள்பட பலர் உடனிருந்தனர்.