
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.குன்னத்தூரில் ஆர்பி உதயகுமார் – க்கு சொந்தமான எம்ஜிஆர் , ஜெயலலிதா உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில், சிலைகளின் மேல்புறம் அதிமுக அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவைச் சார்ந்த அமித்ஷா, மோடி உள்ளிட்ட படங்கள் உள்ள நிலையில், ஓபிஎஸ் / வைத்திலிங்கம் மற்றும் விஜயபாஸ்கரின் படங்கள் அகற்றப்பட்டதுடன், ஓபிஎஸ் ஆதரவாளரான வெல்லமண்டி நடராஜன் படம் மட்டும் வைக்கப்பட்டு இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மேலும் இதனுடன் பாஜகவின் ஜே.பி நட்டா, நிர்மலா சீதாராமன் உடைய படங்களும் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி, ஆர் பி உதயகுமார்-க்கு அளித்துள்ள நிலையில் , தனது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.