செய்திகள்

ஆயிரத்தொரு தலைவெட்டி ஆயர் வம்சம்

1001 HeadCutter AayarVamsam

யாதவசகோதரர்கள் ஹரிஹரர்,புக்கராயர் ஆகியோரால் விஜயநகரபேரரசு ஸ்தாபிக்கப்பட்டது.

முகலாயர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில்களை மீட்டெடுத்து தட்சிணபாரதம்(தென்இந்தியா) முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்தனர் விஜயநகர பேரரசர்கள்.

புக்கராயரின் மகன் குமாரகம்பண்ணர் அன்னை மீனாட்சியின்(MeenakshiAmman) ஆணையை ஏற்று அன்னை மீனாட்சியின் அண்ணன் கண்ணனை(God Krishna) அரசனாக்கி அவருடைய தளபதியாய் படைநடத்தி ஶ்ரீரங்கத்தை மீட்டு நம்பெருமாளை அருளச்செய்து 48ஆண்டுகள் பூஜைகளும்,திருவிழாக்களும் இல்லாமல் முகலாயரின் பிடியில் சிக்கியிருந்த பாண்டியநாட்டை மீட்க மதுரை நோக்கி விரைந்தார்!

மதுரை மாநகரில் பெரும் போர் மூண்டது.மூர்க்கமாக நடந்த அப்போரில் மதுரை, சிவகங்கை (Madurai, Sivagangai) பகுதிகளில் வாழந்த ஏராளமான கோனார்கள் (Konar/Yadavar) கலந்து கொண்டனர்.திருப்பாச்சேத்தி-யை சேர்ந்த சைசுகோனார் (SaisuKonar) திருப்பாச்சேத்தி,திருப்புவனம்,மணலூர் பகுதியில் உள்ள தனது வகையறாக்களோடு சேர்ந்து ஆக்ரோஷமாக போர் புரிந்து ஆயிரக்கணக்கான அந்நியர்களை வெட்டிச் சாய்த்தார்.

“கோயிலை கொள்ளையடித்தால் கோனாருக்கு கொலையாவார்கள்” என்பதன் அடையாளமாய் 1001-வது(பலிதொடரும்) தலையை மேங்காட்டுபொட்டலில் நட்டு வைத்தார் மாவீரன் சைசுகோனார்”

மதுரை மீட்கப்பட்டது,அன்னை மீனாட்சியின் ஆலயம் திறக்கப்பட்டது, பூஜைகள்,திருவிழாக்களும் நடத்தப்பட்டது.

மாவீரன் சைசுகோனார் அவர்களின் வீரத்தை போற்றி மார்கழிமாதம் நடக்கும் அஷ்டமிசப்பர திருவிழாவில் பாண்டியமன்னரால் பரிவட்டம் கட்டும் உரிமை வழங்கப்பட்டது.மேலும் பழங்காநத்தம் பகுதியில் குடியிருப்பும்,மாடக்குளத்தில் விவசாய பூமியும் தரப்பட்டன.

பாண்டியர் காலத்தில் வழங்கப்பட்ட பரிவட்ட கௌரவம் விஜயநகர பேரரசு காலத்திலும் அவர்களது பிரதிநிதிகளான நாயக்கர் காலத்திலும் தொடரந்தது. தெற்குவெளிவீதியை உள்ளடக்கிய பகுதியின் நாட்டாமைகாரர்களாக அமர்த்தப்பட்டனர் கோனாரின் வாரிசுகள்.

“தமிழ்நாட்டில் யாதவர்கள் (ThamilYadhavars) கோன்/கோனார்(Kon/Konar) என்று அறியப்படுவதைப் போல தெலுங்கு யாதவர்கள்(TeluguYadhavars) கொல்லா/கொல்லவார்(Golla/Gollawar) என்று அறியப்படுகிறார்கள்”

சின்னச்சாமி கோனார்

மாவீரன் சைசுகோனார் அவர்களின் இரத்தவழியினரான நாட்டாமை பெரியசாமிகோனார்,நாட்டாமை கருப்பணக்கோனார், நாட்டாமை இடைகருப்பபணன் (எ) பிச்சைக்கோனார் பரிவட்டம் கட்டப்படும் உரிமையை பெற்றனர்.

பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக நாட்டாமை பிச்சைக்கோனார் ஒவ்வொரு பௌர்ணமியிலும் கோயிலில் இருந்து தொடங்கும் மாட்டுவண்டி பந்தயம், குதிரைவண்டி பந்தயம்,சேவற்கட்டு நடத்தி வெற்றிகள் பல குவித்துள்ளார்.

எட்டயபுரம்சமஸ்தானம், சிவகங்கை சம்ஸ்தானம், புதுக்கோட்டை சமஸ்தானம், ராமநாதபுரசமஸ்தானம், தஞ்சை பிரபுக்கள் நடத்திய சேவற்கட்டு மற்றும் குதிரைவண்டி பந்தயங்களில் தனது கருப்புகுதிரை மூலம் தொடர் வெற்றிகளை குவித்து சமஸ்தானங்கள் போற்றப்படும் வல்லவராக திகழ்ந்தார் நாட்டாமை பிச்சைக்கோனார்.

தீராத வழக்குகள் கூட கோனாரிடம் சென்றால் தீரும் என்ற நன்மதிப்பை பெற்றவர் நாட்டாமை பிச்சைக்கோனார் என்பது ஒரு தனிச்சிறப்பு!

நாட்டாமைகாரர் பெரியசாமிகோனார் மகன்  நாட்டாமை கருப்பணக்கோனார்.

நாட்டாமை பிச்சைக்கோனார் அவர்களை தொடரந்து நாட்டாமை சின்னமுத்துக்கோனார், நாட்டாமை சாமியப்பக்கோனார் தற்போது நாட்டாமை கண்ணன்கோனார் மற்றும் நாட்டாமை ஜெயக்குமார்கோனார் மார்கழிமாத அஷ்டமிசப்பர திருவிழாவில் பரிவட்டம் கட்டப்படும் உரிமையை பெற்றுள்ளனர்.

ஜெயக்குமார் கோனார் மற்றும் நாட்டாமை கண்ணன் கோனார்

நாட்டாமைகாரர் குடும்ப பாரம்பரியத்தை காத்து நிற்கிறாள், இடர் வரும்போதெல்லாம் ஓடிவந்து இடயர்குடி காக்கும் முச்சந்தி மாகாளி.

-மதுரை கா.ராஜேஷ்கண்ணா

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
6
+1
0
+1
16
+1
1
+1
0
+1
0
+1
0

Share Now

மதுரை கா.ராஜேஷ்கண்ணா

விடுபட்ட, மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட வரலாற்று தேடல்கள் நெடும் பயணம் என்றபோதும், அதை தொடர்ந்து செய்து வருகின்றேன். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கம். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: