
“இடையர்காவல்”
சிலம்பு/கோல்:
ஆடு,மாடுகளை ஓட்டிச்செல்லும் ஆயர்களின் கையில் இருப்பது சிலம்பு/கோல்.கால்நடைகளை காக்க கம்பை கையில் எடுத்த ஆயர்கள் வேட்டைமிருகங்களின் வேறுபடும் வேட்டையாடும் தன்மையை பொறுத்து சிலம்புவரிசையை உருவாக்கினார்கள். ஆயாின் கோலே அரசனான பின்பு ஆயர்களின் செங்கோலானது.தமிழகத்தின் தற்காப்புகலைகளில் முதன்மையாக இருக்கும் சிலம்பாட்டம் ஆயர்களால் உருவாக்கப்பட்டது.
“கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் கண்ணன்” என்று திருப்பாவையில் ஆண்டாள்நாச்சியார் ஶ்ரீ கிருஷ்ணரை பாடுகிறார்
வேல்கம்பு,தொரட்டிகம்பு:கம்பு நுனியில் கத்தியை கட்டி சிலம்பை வேல்கம்பாகவும், பிறைவடிவ தொரட்டியை சேர்த்து தொரட்டிகம்பாகவும் உருவாக்கினர், ஆயர்கள்.
கம்பில் நெருப்பை பற்ற வைத்து மிருகங்களை விரட்டும் தீப்பந்தமாகவும் வேல், சூலம்,ஈட்டி முதலான ஆயுதங்களை புலி,கரடி போன்ற மிருகங்களை வேட்டையாடவும் ஆயர்கள் பயன்படுத்தினர். ஆயர்கள் பசுமந்தைகளை தாக்க வரும் புலிகளை கொன்று அதனுடைய பல்லையும், நகத்தையும் கோர்த்து கழுத்தில் ஆபரணமாக அணிந்து கொள்வார்கள்.கால்நடைகளை காக்க புலிகளை கொல்வது என்பது ஆயர்களின் வாழ்வில் அன்றாட நிகழ்வு.
அங்குசம்:
ஆயர்களின் வேல்கம்பும்,தொரட்டியும் சேர்ந்த அமைப்பில்தான் யானையை அடக்கும் அங்குசம் உள்ளது.
தென் இந்தியாவில் மிகப்பெரிய யானைப்படையை வைத்திருந்த பொதிகை மலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த ஆயர்குல அரசர் ஆய்அண்டிரன் யானை மந்தைகளை போர்க்களிறுகளாக மாற்றுவதில் வல்லமை மிக்கவராக விளங்கியவர்.அரசர் ஆய்அண்டிரன் சின்னமாக யானை விளங்கியது.அந்த வம்சத்தின் மிச்சமாக இன்றும் திருவிதாங்கூர் அரசசின்னமாகவும் யானை உள்ளது.
“ஆயர்குல நாயகனான திருமால் (கண்ணன்) யானையை அடக்கும் காட்சி திருமலை,திருப்பதி” செஞ்சி, திருஅண்ணாமலை பகுதியில் வாழந்த ஆயர்கள் திருப்பதி காடுகளில் இருந்த யானைமந்தைகளை அடக்கி சோழர்களின் யானைப்படையை வலிமையாக்கினர்.
சாட்டைகம்பு/முழங்கம்பு/இரட்டைகுச்சி:
நெத்திமட்டம் உள்ள சிலம்புதடியை சமஅளவில் இரண்டாக பிரித்து அதை தற்காப்பு ஆயுதமாக பயன்படுத்தினர் ஆயர்கள்.கோலாட்டம் என்ற பெயரில் இசையுடன் அதற்கான பயிற்சியை ஆயர்களும், ஆயர்குல பெண்களும் செய்து வந்தனர்.
கைநீளம் உள்ள கம்பின் நுனியில் ஆடு/மான் தோலை சன்னமாக அறுத்து அதில் கட்டி மாடுகள், குதிரைகள் ஓட்டிடும் சாட்டைகம்பாக ஆயர்கள் பயன்படுத்தினார்கள். ஆயர்கள் சிறந்த குதிரை வீரர்களாகவும், குதிரைகளை போருக்கு பழக்கி கையாளுவதில் வல்லவர்களாகவும் விளங்கியுள்ளனர்.
குதிரை மீது அமர்ந்து மாடுகளை மேய்க்கும் ஆயர்களை(அண்டர்) பற்றி சங்கஇலக்கியம் குறிப்பிடுகிறது.
“கால்வல் புரவி அண்டர் ஓட்டி” பதிற்றுப்பத்து 88-வது பாடல்
குறுந்தொகை117,210-வது பாடல்
“மாஅல்(திருமால்) யமுனைத் துறையில் அண்டர்(ஆயர்) மகளிர் ஆடைக்காக மரத்தை மிதித்துக் கிளைகளை வளைத்துத் தந்தான்”அகநானூறு 59-வது பாடல்
மட்டுவு/மான்கொம்பு:
ஆயர்கள் எளிதாக எடுத்து செல்லும் ஆயுதங்களில் மட்டுவும் உள்ளது.மட்டுவு சிலம்பாட்டத்தில் தற்காப்பு ஆயுதமாக உள்ளது. மான் அல்லது செம்மறிஆட்டு கிடாய்களின் இரண்டு கொம்புகளை ஒன்றாக சேர்த்து மட்டுவு என்னும் ஆயுதத்தை ஆயர்கள் உருவாக்கி வைத்தனர்.
காட்டிற்குள் செல்லும்பொழுது ஆயர்கள் நீர் தேவைக்காக மான்/ஆட்டு தோலை பையாக தைத்து அதில் நீரை சேமித்து தாகத்தை தீர்த்து கொண்டனர். தாக்குதலையும், தற்காப்பையும் ஒரே நேரத்தில் நிகழ்த்த கூடியது செம்மறிஆட்டுக்கிடாய். ஆட்டுக்கிடாய் சிறந்த போர்வீரனாக கருதப்பட்டு ஆயர்களால் பலியிடப்பட்டது.
வளரி:
ஆயர்கள், தங்களின் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் சுதர்சன சக்கரத்தை போல எய்தவரிடமே திரும்பி வரும் வகையில் உருவாக்கப்பட்ட ஆயுதம் வளரிதடி
வேட்டைமிருகங்களிடம் இருந்து கால்நடைகளை காக்க ஆயர்களால் உருவாக்கப்பட்ட ஆயுதமே, வளரி. வளரி மான் கொம்பு, யானைத் தந்தம், மரம் மற்றும் உலோகத்தால் செய்யப்பட்டது.
ஆயர்குல சிறார்கள், தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்லும் பொழுது அவைகளை விட்டு விலகிச்செல்லாமல் இருந்த இடத்தில் இருந்தே கூட்டமாக வரும் ஓநாய்கள், நரிகள் போன்றவைகளை விரட்டுவதற்கும்,வேட்டையாடுவதற்கும் வளரியை பயன்படுத்தினர்,
கால்நடைகளை திருடிச்செல்லும் திருடர்களை உயிருடன் பிடிக்க மரத்தால் ஆன வளரியைப் ஆயர்கள் பயன்படுத்தினர்.சிலநேரங்களில் கம்பில் இருக்கும் தொரட்டியையும்,அருவாளையும் வளரியை போல் பயன்படுத்தினார்கள்.
ஆயர்வீட்டு திருமணங்களின் போது ஆயர்மகன் கையில் வளரியுடன் வரும் வழக்கம் இன்றும் உள்ளது. திருமணம் முடிந்த பிறகு, ஆயர்மகள்வீட்டு மாட்டுமந்தைக்கு அழைத்துச் செல்லப்படும் மாப்பிள்ளை தன் திறமையால் மந்தைக்கு மேலே வளரியை எறிவார். எறியப்பட்ட வளரி எதுவரை செல்கிறதோ அதுவரை உள்ள மாடுகள் மாப்பிளைக்கு சீதனமாக வழங்கப்படும்.
சுருள்வாள்:
ஆயர்கள்,சுருள்வாளை இடுப்புப்பட்டையாக அணிந்து கொண்டு காட்டுக்கு கால்நடைகளை ஒட்டிச் செல்வர். இக்கட்டான சூழ்நிலையில் வேட்டைமிருகங்களோ, திருடர்களோ சூழ்ந்து கொண்டால் ஆயர்கள் சுருள்வாளை உருவி சுழற்றி அடிப்பார்கள்.
இரண்டு, மூன்றுக்கு மேலான சாட்டைகள்/பட்டையான சுருள்வாள்கள் அதில் இணைக்கப்பட்டிருக்கும். சுருள்வாள் தசைகளை பிய்த்து எறிந்து மோசமான காயத்தை உண்டாக்கும்.களரிகலையில் சுருள்வாள் முக்கியமான ஆயுதப்பயிற்சியாக உள்ளது.
ஆயர்களின் ஆயதப்பயிற்சியை மேம்படுத்தி ஆயர்களை மேலும் வல்லமை படைத்தவர்களாக மாற்றியவர் அகத்தியர்.