
அரசாணை (நிலை) எண்.31, சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை, நாள்.26.06.2014-ன்படி அனைத்து பணிபுரியும் மகளிர் விடுதிகளும் தமிழ்நாடு விடுதிகள் சட்டம் 2014-ன் கீழ் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பதிவு செய்து உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.
சமூகநல இயக்குநர், சமூகநல இயக்குநரகம், சென்னை அவர்களின் 27.06.2022 அன்றைய கடிதத்தின்படி, மதுரை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பணிபுரியும் மகளிர் விடுதிகளும் 01.07.2022 முதல் ஆன்லைனில் https://tnswp.com-என்ற முகவரியில் பதிவு செய்து உரிமம் பெற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பணிபுரியும் மகளிர் விடுதிகள் உரிமம் பெற மேற்கண்ட ஆன்லைன் முகவரியில் 01.07.2022 முதல் பதிவு செய்து உரிமம் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1