செய்திகள்மாநகராட்சி

ஆனையூர் குறைதீர்க்கும் முகாமில் 55 மனுக்களை பெற்றுக் கொண்டார் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த்

Mayor V. Indrani Ponvasant received 55 petitions in Anayur grievance redressal camp.

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (கிழக்கு) ஆனையூர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் தலைமையில் (30.08.2022) நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி ஆனையூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள கிழக்கு மண்டலம் 1 அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெயர் மாற்றம் வேண்டி 13 மனுக்களும், புதிய வரி விதிப்பு தொடர்பாக 4 மனுக்களும்.

மற்றும் காலிமனை வரிவிதிப்பு தொடHபாக 11 மனுக்களும், சுகாதார வசதி வேண்டி 2 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 25 மனுக்களும் என மொத்தம் 55 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால் நேரடியாக பெறப்பட்டது.

சென்ற குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட 81 மனுக்களில் 78 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வதுடன் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்குகு மேயர் அவர்கள் உத்தரவிட்டார்.

இம்முகாமில் துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் வாசுகி, நகரப்பொறியாளர் லெட்சுமணன், உதவி ஆணையாளர் (பொ) சேகர், செயற்பொறியாளர்கள் பாக்கியலெட்சுமி, ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் (திட்டம்) அலாவுதீன், மக்கள்தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், நிர்வாக அலுவலர் ரெங்கராஜன், உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: