கலெக்டர்செய்திகள்

ஆதிதிராவிடர் & பழங்குடியினர் பள்ளி, கல்லூரி விடுதிகளில் காலியிடங்களுக்கு மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் | மதுரை கலெக்டர் அறிவிப்பு

Students can apply for vacancies in Adi Dravidian & Tribal School and College Hostels Madurai Collector Notification

மதுரை மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் உள்ள காலியிடங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்காக விடுதி மேலாண்மை அமைப்பு செயலியின் மூலம் இணைய வழியில் மாணாக்கர்களின் சேர்க்கை நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, https://tnadw-hms.in/application என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பள்ளி விடுதிகளுக்கான சேர்க்கை 20.07.2022 வரையிலும், கல்லூரி விடுதிகளுக்கான சேர்க்கை 18.07.2022 முதல் 05.08.2022 வரையிலும் என விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் விடுதி சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட மாட்டாது. தகுதியான மாணவர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என, மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

ரவி சந்திரன்

ஹலோ மதுரை மாத இதழின் மூத்த நிருபர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: