செய்திகள்

ஆண்டிப்பட்டியிலிருந்து மதுரை இரயில் பயணம் வெள்ளோட்டம் ஆரம்பம்

Preview of the Madurai train journey from Andipatti

மதுரை டு ஆண்டிபட்டி இடையே ரயில் போக்குவரத்து பயணம் எப்போது என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நிலையில், நேற்று (16/12/2020) மதுரை டு ஆண்டிபட்டி இடையே ரயில் வெள்ளோட்டம் மாலை நடைபெற்றது. தென் மாவட்டத்தில் மிக முக்கிய போக்குவரத்தாக கருதப்படும் இந்த ரயில் மலைகளுக்கு நடுவே இயற்கை எழிலை கொஞ்சும் பாதைகளுக்கு நடுவே கடந்து செல்லும்.

ஆண்டிப்பட்டியிலிருந்து மதுரைக்கு நேற்று முதல் இந்தரயில் வெள்ளோட்டம் விடபட்டுள்ளது இரு பகுதி மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்த முதல் இரயில் பயண போக்குவரத்து துவக்க விழாவில் இதில் துணைமுதல்வரின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.ரவீந்திரநாத் குமார், MBA,MP அதில் கலந்து கொண்டு கொடியசைத்து சிறப்பித்தனர்.

விழாவை முன்னிட்டு காலையில் ஆண்டிபட்டி ரயில் நிலையத்தில் யாகசாலை வளர்த்து பூஜை நடத்தப்பட்டது. இதில் ரயில்வே கோட்ட மேலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Share Now

Hello Madurai

மதுரை குறித்த பயனுள்ள செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள் ஆகியவை அடங்கிய வலைதளம். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக Hello Madurai App பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்திகள் மற்றும் விளம்பரங்கள் பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் - 9566531237.
Back to top button
error: