
மதுரை அருகே உள்ளது அழகர் கோவில் ஆகும். இதன் மலை மேல் உள்ள நுகருகங்கைபுனித நீரில் ஆடி அமாவாசையை ஒட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் புனித நீராடினார்கள்.
மேலும் தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் புனித நீரை எடுத்துக்கொண்டு அங்குள்ள ராக்காயி அம்மனை வழிபட்டுதொடர்ந்து ஆறாவது படை வீடு என சோலைமலை முருகன் கோவிலில் உள்ள சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை பக்தர்கள் வணங்கி செல்கிறார்கள்.
மேலும், மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் என்ற சுந்தர் ராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூமாதேவி மற்றும் கல்யாண சுந்தரவல்லி தாயார் சக்கரத்தாழ்வார் ஆண்டாள்காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியை வழிபட்டு பிரசாதம் பெற்று சென்றனர். இதற்கான விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமசாமி மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
+1
+1
+1
+1
+1
+1