செய்திகள்விருது | விழா | கூட்டம்

அவனியாபுரம் மாட்டுவண்டி சங்கம் சார்பில் 41வது ஆண்டு விழா மாட்டுவண்டி பந்தயம்

41st Annual Bullock Race organized by Avaniyapuram Bullock Association

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் மாட்டுவண்டி சங்கம் சார்பில் 41 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெரிய மாட்டு வண்டி பிரிவில் 7 மாட்டு வண்டிகளும் மற்றும் சிறிய மாட்டுவண்டிகளுக்கான பிரிவில் 8 மாட்டுவண்டிகளும் போட்டியில் கலந்து கொண்டன.

அவனியாபுரம் முதல் நிலையூர் வரை சென்று திரும்பும் மாட்டு வண்டிகளுக்கு மொத்தம் 31 கிலோமீட்டர் தூரம் உள்ள எல்லையை தொட்டு வரும் மாடுகளுக்கு முதல் பரிசாக 60 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசாக 50 ஆயிரம், 3வது பரிசாக 40 ஆயிரம் ரூபாயும் ஆறுதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கபடுகிறது.

பரிசு பெற்றவர்கள் விவரம்

பெரிய மாட்டுவண்டி பந்தயத்தில் திருவாதவூர் K.L. அம்பாள் மாடு முதல் பரிசு ரூபாய் 60 ஆயிரம்.
2வது பரிசு பாண்டி கோவில் பாண்டிசாமி மாடு 50 ஆயிரம்
3வது பரிசு அவனியாபுரம் நகை கடை முருகன் மாடு 40 ஆயிரம் பரிசு பெற்றது.

ஆறுதல் பரிசு ஆட்டுக்குளம் காந்தி என்பவருக்கும் வழங்கப்பட்டது.

 

இதேபோல் சிறிய மாட்டுவண்டிகளுக்கான போட்டியில் பங்குபெரும் மாட்டுவண்டிகளுக்கு

முதல் பரிசாக ஜெய்ஹிந்புரம் அக்னி முருகன் 40 ஆயிரம் ரூபாயும்
2வது பரிசாக தேனி K.K.பட்டி கணேஷ் 30 ஆயிரம் ரூபாயும்
3வது பரிசாக தேவகோட்டை லெஷ்மணன் 20 ஆயிரம் ரூபாயும்

ஆறுதல் பரிசாக உத்தமபாளையம் மணி முருகன் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

விழாவிற்கு ரேக்ளா ரேஸ் சங்க மாவட்ட தலைவர் மேலமடை சீமான் ராஜா தலைமையில் அவனியாபுரம் மாரி 99 வது மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினர்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: