
மதுரை வைக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 42 )இவர் முனிச்சாலையில் உள்ள பழைய இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மெகரா பானு என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று வேலை முடிந்து மதியம் வீட்டிற்கு வருவதற்காக அவனியாபுரத்தில் இறங்கி வைக்கம் பெரியார் நகர் பகுதிக்கு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த வாகனம் அப்பாஸ் மீது மோதி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்ட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர்.
தொடர்ந்து இந்த விபத்து குறித்து சிலைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.