
அவனியாபுரத்தில் காரில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 124 கிலோ புகையிலை பொருட்களையும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் காரை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவனியாபுரம் போலீசார் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.8 அவர்கள் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த கார் காரையும் காரில் இருந்தவர்கள் மீதும் சந்தேகம் அடைந்து அவர்களிடம் சோதனை நடத்தினார் .சோதனையில் காரில் 124 கிலோ புகையிலை பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த காரில் இருந்த இரண்டு பேரிடமும் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் ஐயர் பங்களா பிருந்தாவன தெருவை சேர்ந்த அர்ஜுனன் மகன் ராஜா 42, பர்மா காலனி திருப்பதி மகன் பாலமுருகன் 36 என்று தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் புகையிலைப் பொருட்கள் கடைகளுக்கு விற்பனை செய்தது தெரிந்தது.
இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்கள் விற்பனை செய்த பணம் ரூ.15 ஆயிரத்தையும் பதுக்கி வைத்திருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.