செய்திகள்போலீஸ்

அவனியாபுரத்தில் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக காவல் செயலி பதிவிறக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

An awareness program on download of police app on behalf of city traffic police in Avaniyapuram

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக காவல் உதவி செயலி பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை அவனியாபுரத்தில் உள்ள சேர்மத்தாய் வாசன் கலைக் கல்லூரியில் நடைபெற்றதது.

மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி கலந்து கொண்ட சிறப்பு உரையாற்றினார். அப்போது வாட்ஸ் அப், பேஸ்புக், ஜோமடோ, ஸ்விக்கி போன்ற செயல்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் காவல் செயலையும் முக்கியமே என்றார்.

தொடர்ந்து இதில் கொடுக்கப்படும் மாணவிகளின் தகவல்கள் எக்காரணம் கொண்டும் பரிமாறப்படாது. முற்றிலும் பாதுகாப்பானது, இதை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பயனாளர் தங்களுக்கு மூன்று நெருக்கமான உறவுகளை அதில் பதிந்து வைத்து கொண்டு உங்களுக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் போது அது உங்களுக்கு நெருக்கமான உறவுகளுக்கும் மற்றும் அருகில் உள்ள காவல் துறைக்கு தகவல் சென்று விடும்.

இது முற்றிலும் பெண்கள் காவல்துறையிறனால் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. எனவே மாணவிகள் எதற்கும் அச்சப்பட வேண்டியதில்லை என காவல் செயலி குறித்த விழிப்புணர்வாக, மதுரை தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் தங்கமணி அறிவுரை வழங்கினார்.

 

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Share Now

செய்தியாளர் வி.காளமேகம்

ஹலோ மதுரை மாத இதழின் செய்தியாளர். உங்கள் செய்திகளை hellomadurai777@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு புகைப்படத்துடன் அனுப்பிவைக்கவும். விளம்பர தொடர்புக்கு 9566531237 எனும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Back to top button
error: