அவனியாபுரத்தில் மத்திய அரசு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் போக்கை கைவிட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்
The Congress party protested in Avaniyapuram urging the central government to stop taking revenge on the opposition parties

நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்ந்து சோனியா காந்தி ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. மேலும் உணவுப் பொருட்கள் மீதான மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வை கண்டித்தும். இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் மதுரை அவனியாபுரம் பகுதியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் உட்பட 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன் கூறுகையில்:
சுதந்திரப் போராட்டத்தின் போது நேருவின் தந்தை மோதிலால் ஓரா மூலம் தொடங்கப்பட்ட பத்திரிகை தான் நேஷனல் ஹெரால்டு. நேரு குடும்பத்தில் கைப்பற்றியதோடு தொடர்ந்து அவர்கள் மீது மத்திய அரசு அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது கண்டிக்கத்தக்கது.
மத்திய நிதியமைச்சரின் மக்கள் விரோத செயலாக உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்தி உள்ளதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.